Published on : 29 Apr 2023 18:53 pm

காட்பாடி கனமழை முதல் ரூ.10-க்கு கிலோ தக்காளி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஏப்.29, 2023

Published on : 29 Apr 2023 18:53 pm

1 / 14
காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் இரா.செழியன் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் இரா.செழியனின் பேச்சுக்கள் அடங்கிய மக்களுக்கான நாடாளுமன்றம் நூலை வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே பெற்றுக்கொண்டார். அருகில், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பொன்னையன், மாநிலங்களவை உறுப்பினர் ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் ராஜா உள்ளிட்டோர். | படம்: வி.எம்‌.மணிநாதன்
2 / 14
திருச்சி புதிய நீதிமன்றம் அருகே உள்ள சாலை நடைபாதையில் கிரானைட் பதிக்கும் பணியில் தொழிலாளர்கள். | படம்: வெங்கடேஷ்.ஆர்
3 / 14
திருச்சி காந்தி மார்க்கெட்டில் விலை குறைந்து ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி. | படம்: வெங்கடேஷ்.ஆர்
4 / 14
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் இன்று செட்டிப்பெண் இரத்தனாவதிக்கு சிவபெருமான் தாயுமானவராய் வந்து மருத்துவம் செய்த நிகழ்வு நடைபெற்றதில் சிறப்பு அலங்காரத்தில் தோன்றிய ஸ்வாமி அம்பாள். | படம்: வெங்கடேஷ்.ஆர்
5 / 14
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீர்புரம் அருகே சாலையின் நடுவில் வளர்க்கப்படும் செடிகள் நீரின்றி வெயிலில் காய்ந்து காணப்படுகிறது. | படம்: வெங்கடேஷ். ஆர்
6 / 14
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் மு.அன்பழகன் மாமன்ற உறுப்பினர்களிடம் குறைகளைக் கேட்டு விளக்கமளித்தார். கூட்டத்தில் துணை மேயர் ஜி.திவ்யா, ஆணையர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர். | படம்: வெங்கடேஷ். ஆர்
7 / 14
திருச்சி பெரிய கடைவீதி பகுதியில் திருட்டுப்போன ஒரு கிலோ தங்கம் மீட்கப்பட்ட நிலையில் திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் மு.சத்யபிரியா திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார்.| வெங்கடேஷ். ஆர்
8 / 14
மதுரை ஹோட்டல் மாஸ்க்வாவில் எவிடன்ஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பேசுகிறார்கள் என்ற மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் நிர்வாக சிக்கல்கள் மற்றும் தங்கள் மீதான வன்கொடுமைகள் பற்றி உரையாற்றிய மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ப.வளர்மதி. | படம்: நா. தங்கரத்தினம்
9 / 14
காட்பாடியில் பிற்பகல் 30 நிமிடத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் பெய்த மழையில் சாலையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். | படம்: வி.எம்.மணிநாதன்
10 / 14
புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய 31 மாத சம்பளத்தை வழங்கக்கோரி தலைமை அலுவலகம் முன்பு பேராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
11 / 14
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற கலைமாமணி விருது வழங்கும் விழாவில் விருது வழங்கி கவுரவித்த முதல்வர் ரங்கசாமி. அருகில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா, துணை சபாநாகர் ராஜவேலு. | படம்: எம்.சாம்ராஜ்
12 / 14
பதுச்சேரி மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தடைக் காலத்தை முன்னிட்டு துறைமுகத்தின் படகுகள் கட்டும் தளத்தை சீர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. | படம்: எம்.சாம்ராஜ்
13 / 14
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ் வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வின் போது ஏராளமான பக்தர்கள் கள்ளழகர் வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். கள்ளழகர் வேடம் அணிபவர்கள் தலையில் வைக்கக்கூடிய மூங்கில் உருமா கிரீடம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். | இடம்: மதுரை கீழமாசி வீதி | படம்: நா.தங்கரத்தினம்.
14 / 14
கள்ளழகர் வேடம் அணிபவர்கள் தலையில் வைக்கக்கூடிய மூங்கில் உருமா கிரீடம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். | இடம்: மதுரை கீழமாசி வீதி | படம்: நா.தங்கரத்தினம்.

Recently Added

More From This Category

x