Published on : 28 Apr 2023 18:23 pm

எருது விழா முதல் நவீன சிக்னல் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஏப்.28, 2023

Published on : 28 Apr 2023 18:23 pm

1 / 14
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளின் குறைத்திருப்பு நாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அணிசேகர் தலைமையில் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 14
வேலூர் அடுத்த பென்னாத்தூர் கிராமத்தில் நடைப்பெற்ற எருது விடும் விழாவில் இளைஞர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்து ஓடிய காளை. | படம்: வி.எம்.மணிநாதன்.
3 / 14
கோவை செல்வபுரம் சிவாலயா சந்திப்புப் பகுதியில், தன்னார்வலர்கள் உதவியுடன் மாநகர காவல்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன சிக்னல் கம்பத்தை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் நேற்று பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அருகில் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் மதிவாணன் உள்ளிட்டோர் உள்ளனர். | படம் : ஜெ.மனோகரன்.
4 / 14
வேலூர் மாவட்டத்தில் உள்ள கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 2006-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளை அழிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. | படம்: வி.எம்‌.மணிநாதன்‌.
5 / 14
மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே தனியார் பேருந்து கவுந்து விபத்து ஏற்பட்டதில் துரை ராஜாஜி வருஷம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். | படம் ;எஸ் .கிருஷ்ணமூர்த்தி
6 / 14
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
7 / 14
வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள அரசினர் பாதுகாப்பு இடத்தில் 7 சிறார்கள் தப்பித்து சென்றதை தொடர்ந்தும் பாதுகாப்பு இடம் முன்பாகவும், சுற்றுச்சுவர் சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
8 / 14
மதுரை ரயில்வே துறையின் எஸ் ஆர் எம் யு சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் உள்ள நிலையில் அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு மதுரை மண்டலத்தின் சங்கத்தின் செயலாளர் ரபீக் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
9 / 14
மதுரை திருமங்கலம் - மேலூர் வரையும் மெட்ரோ ரயில் திட்டம் அடுத்த ஆண்டு பணியில் தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கான பணிகள் மண் பரிசோதனை செய்யும் பணி மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் நடைபெற்று வருகிறது . | படம்; எஸ .கிருஷ்ணமூர்த்தி
10 / 14
மதுரை அண்ணா நகர் பகுதியில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர் சங்கம் பாதுகாப்பு பேரமைப்பு சார்பாக ஓட்டுனருக்கு பணி பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
11 / 14
புதுச்சேரி உப்பளம் ரெயில் நிலையில் தண்டவாளம் பகுதியில் பயணிகளால் விசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் செடிகளை சுத்தம் செய்யும் கூலி தொழிலாளர்கள். | படங்கள்.எம்.சாம்ராஜ்
12 / 14
புதுச்சேரி வழங்கப்படாத சம்பளத்தை வழங்கக்கோரி பெனாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற அமுதசுரபி ஊழியர்கள் அரசு பொதுமருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . |படம்.எம்.சாம்ராஜ்
13 / 14
புதுச்சேரி அரசு மூலம் வழங்ககப்பட்ட இலவச மிதிவண்டியை தந்தையில் இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச்செல்லும் ஓப்பதாம் வகுப்பு மாணவி விஷ்ணுபிரியா | படம் : எம். சாம்ராஜ்
14 / 14
புதுச்சேரி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் முன்பு ஈழப்பீடு தரகோரி முற்றுகையிட்ட விபத்தில் கால்களை இழந்த ஜீவரத்தினம், அவரது வழக்கறிஞர் அய்யப்பன், நீதிமன்ற அமீனா வெங்கட். | படம்.எம்.சாம்ராஜ்

Recently Added

More From This Category

x