1 / 26
சென்னை விமான நிலையத்தில் பிரதமரால் திறக்கப்பட்ட புதிய முனையம் செயல்படத் துவங்கியது. முதல் விமானமாக தோகாவிலிருந்து வந்த விமான பயணிகள் வெளிவந்தபோது கரோனா சோதனை செய்து பூ கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர். | படம்: எம்.முத்துகணேஷ்
2 / 26
பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நலத்திட்ட உதவிகள் வழங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அருகில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ் ஆகியோர். | படம்: எம்.முத்துகணேஷ்
3 / 26
தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில் சிறுதானிய மற்றும் மூலிகைகள் கண்காட்சி நடந்தது. இதனை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் துவக்கி வைத்து பார்வையிட்டார். அருகில் தேசிய சித்த மருத்துவமனை இயக்குனர் மீனா குமாரி மற்றும் பலர். | படம்: எம்.முத்துகணேஷ்
4 / 26
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் சித்திரை பொருட்காட்சியில் முதல் முறையாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு வைக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மேம்பாட்டு துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. | படம்: எஸ் கிருஷ்ணமூர்த்தி
5 / 26
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் நிகழ்வுக்காக அலங்கரிக்கப்பட்டுள்ள மீனாட்சி அம்மன் கோயில் பெரிய தேர். | படம்: நா.தங்கரத்தினம்
6 / 26
தாம்பரம் மாநகராட்சிஉள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடையே கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி தாம்பரம் மாமன்ற கூட்ட அரங்கில் இன்று நடந்தது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மனுக்களை பெற்றுக் கொண்டு ஆய்வு செய்தார். அருகில் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், ஆணையாளர் அழகுமீனா ஆகியோர். | படம்: எம்.முத்துகணேஷ்
7 / 26
தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேடை மேம்பாலம் கூடுதல் இணைப்பு பகுதியை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தார். இந்தப் பாலம் தாம்பரம் பகுதியில் ஜிஎஸ்டி சாலையை கடந்து ரயில் நிலையத்துக்கு உள்ளேயே நேரடியாக செல்லும் வசதியை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ரயில் நிலையத்துக்கு செல்வதற்கு வசதியாக புதிதாக கட்டி இணைக்கப்பட்ட நடை மேம்பாலம் இது. |
படம்: எம்.முத்துகணேஷ்
8 / 26
ஸ்மார்ட் சிட்டியின் ஒரு பகுதியாக கோவை குறிச்சி குளக்கரையில் தமிழர்களின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் அலங்கார கட்டமைப்புகள் வளைவுகள். | படம்: ஜெ.மனோகரன்
9 / 26
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள கள்ளழகர் ஊர்வலம் கோரிப்பாளையம் முதல் வைகை ஆறு வரை செல்லும் ஆழ்வார்புரம் சாலை. | படம்: நா.தங்கரத்தினம்.
10 / 26
மதுரை காங்கிரஸ் கமிட்டி சார்பாக மே 1-ம் தேதி நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பார்வையாளராக பிரின்ஸ் எம்எல்ஏ தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
11 / 26
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (புதுடெல்லி) உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் மதுரை தல்லாகுளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
12 / 26
சூடானில் உள்நாட்டு போர் காரணமாக வெளிநாட்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்தியாவின் ‘ஆபரேஷன் காவிரி’ மூலமாக முதற்கட்டமாக 360 இந்தியர்களை விமானப் படை விமானம் அழைத்து வந்தது. அதில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்கள் குடும்பத்தினரிடம் உருக்கமாக தங்களது அன்பை பகிர்ந்து கொண்டனர். | படங்கள்: எம்.முத்துகணேஷ்
13 / 26
தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் பணியின்போது அலுவலகத்துக்குள் புகுந்து லூர்து பிரான்சிஸ் விஏஓ வெட்டிக் கொல்லப்பட்டதை கண்டித்தும் பணிப் பாதுகாப்புக்காக துப்பாக்கி வழங்க கோரியும் செங்கல்பட்டு மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஜானகி ராமன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. | படம்: எம்.முத்துகணேஷ்
14 / 26
கும்பகோணத்தில் வெப்பச் சலனத்தால் பெய்த மழையில் நனைந்தபடி செல்கின்றனர். இடம்: பழைய பேருந்து நிலையம். | படம்: சி.எஸ்.ஆறுமுகம்
15 / 26
வேலூர் மாவட்டத்தில் உள்ள கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 2006-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளை அழிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்
16 / 26
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறை தீர்வுக் கூட்டம் கூடுதல் செயலாளர், ஓய்வூதிய இயக்குநர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்
17 / 26
வேலூர் அடுத்த பென்னாத்தூர் கிராமத்தில் நடைப்பெற்ற எருது விடும் விழாவில் இளைஞர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்து ஓடிய காளை. | படம்: வி.எம்.மணிநாதன்
18 / 26
மதுரை சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியான வடக்கு மாசி வீதி ராமாயண சாவடியிலிருந்து குதிரை வாகனத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசர் பிரியாவிடை பக்தர்களுக்கு அருள் பாவித்தார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
19 / 26
சூடான் உள்நாட்டுப் போர் எதிரொலியாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விமானம் மூலம் இன்று மதுரை வந்தனர். | படம்: நா.தங்கரத்தினம்
20 / 26
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு இஸ்லாமிய மக்கள், குளிர்பானங்கள் வழங்கி வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
21 / 26
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மே 3-ல் நடைபெறும் தேரோட்டத்துக்காக தேர்கள் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
22 / 26
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் சிறு பாலம் கட்டி 15 நாளில் இடிந்தது தொடர்பான விவாதத்தின் போது, திமுக உறுப்பினர்களுக்கும் அதிமுக, அமமுக உறுப்பினர்களுக்கும் இடையே வாக்கு வாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
23 / 26
ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் சைக்கிள் மீது கார் மோதியதில் சிறுவன் காயமடைந்தார். இதனையடுத்து அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
24 / 26
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் அலோபதி மருத்துவ மையத்தைத் தொடர்ந்து, சித்தா முதலுதவி மருத்துவ மையமும் தொடங்கப்பட்டுள்ளது.
25 / 26
கோவை செல்வபுரம் சிவாலயா சந்திப்புப் பகுதியில், தன்னார்வலர்கள் உதவியுடன் மாநகர காவல் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன சிக்னல் கம்பத்தை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அருகில் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் மதிவாணன் உள்ளிட்டோர் உள்ளனர். | படம்: ஜெ.மனோகரன்
26 / 26
பழநியில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க நீச்சல் குளத்தில் யானை கஸ்தூரி ஆனந்த குளியல் போட்டது. | தகவல்: ஆ.நல்லசிவன்