Published on : 26 Apr 2023 18:41 pm

விஏஓ லூர்து பிரான்சிஸுக்கு இறுதி அஞ்சலி முதல் மதுரை சித்திரை திருவிழா வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஏப்.26, 2023

Published on : 26 Apr 2023 18:41 pm

1 / 19
தூத்துக்குடி அருகே கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து லூர்து பிரான்ஸிஸின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. | படம்: என்.ராஜேஷ்
2 / 19
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அருகே இரு தினங்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'காலிப் பணியிடங்களை நிரப்பவும், கோடை விடுமுறை விடுவது குறித்தும் தமிழக முதல்வருடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என மாநில சமூக நலத் துறை அமைச்சர் அறிவித்தார். இதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. | இடம்: வேலூர் | படம்: வி.எம்.மணிநாதன்
3 / 19
அங்கன்வாடி ஊழியர்கள் மே மாத விடுமுறை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அங்கன்வாடி மையங்களுக்கு ஊழியர்கள் பணிக்கு வராததால் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாநகராட்சி பெண் ஊழியர்கள் குழந்தைகளுக்கு உணவு வழங்கி பாடங்களை கற்பித்தனர். இதனை, 27-வது வார்டு மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பச்சையம்மன் பார்வையிட்டார். | படம்: வி.எம்.மணிநாதன்.
4 / 19
மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானம் அருகே உள்ள அரசு அச்சகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி, சரண்டர் காலமுறை ஊதியம் உள்ளிட்ட வாழ்வாதார நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 19
மதுரை வைகை வடகரை மதிச்சியம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடத்தை திறந்து வைத்து பார்வையிட்ட மேயர் இந்திராணி, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் உடன் மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங் காலோன். | படம்: நா.தங்கரத்தினம்
6 / 19
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் இருந்து பேரணியாக சென்ற மாணவ, மாணவிகள். | படம்: வி.எம்‌.மணிநாதன்.
7 / 19
கோவை மாதம்பட்டி பகுதியில் முட்டை கோஸ் அறுவடை செய்யும் விவசாயி. | படம்: ஜெ.மனோகரன்
8 / 19
மதுரை சித்திரை திருவிழா நான்காம் நாள் நிகழ்ச்சியாக மதுரை வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் இருந்து சித்திரை வீதிகள் வழியாக தங்க பல்லாக்கு. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
9 / 19
தூத்துக்குடியில் விஏஓ லூர்து பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்டிருந்த பிணவறைக்கு சென்று அஞ்சலி செலுத்திய கனிமொழி. அவருடன் உடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
10 / 19
தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸின் மகன்களுக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
11 / 19
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இயங்கி வரும் ஆதார் இ-சேவை மையத்தில் அடிக்கடி சர்வர் கோளாறு ஏற்படுவதால் டோக்கன் வாங்கிக் கொண்டு வெகு நேரம் காத்திருக்கும் மக்கள்.
12 / 19
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் அம்முண்டி, மதுரா மற்றும் ஆரியமுத்து மோட்டூர் ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாமில் அமைச்சர் துரைமுருகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்
13 / 19
மதுரை மத்திய சிறையில் சிறைத் துறை டிஜிபி அம்ரேஷ்பூசாரி, மதுரை சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்கும் செய்பொருள் அங்காடியை திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் டிஐஜி பழனி உள்ளிட்ட அதிகாரிகள். | படம்: நா. தங்கரத்தினம்
14 / 19
மதுரை மத்திய சிறையில் சிறப்பாக செயல்பட்ட சிறை காவலர்களுக்கு சான்றிதழ் அளித்து பாராட்டிய டிஜிபி அம்ரேஷ்பூசாரி. | படம்: நா. தங்கரத்தினம்
15 / 19
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள் முன்னேற்பாடு தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
16 / 19
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.
17 / 19
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கடந்த 24-ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவதற்காக எம்.பில் முடித்த இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் அரவிந்த்சாமி என்பவர் பட்டம் பெற வந்தார். அவரை போலீஸார் பட்டம் பெற விடாமல் தடுத்து அவர் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயல்கிறார் என்று கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். மேலும் அவரது ஆடைகளைக் களைந்தும் சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்தை இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் வாலிபர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மாணவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றிக் கைது செய்தனர்.
18 / 19
பழநி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
19 / 19
கோவை தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா | படம்: சிவ சரவணன் எஸ்

Recently Added

More From This Category

x