மழை, மகசூல் வேண்டி பொன்னேர் பூட்டும் விழா - ஆல்பம்
Published on : 16 Apr 2023 18:00 pm
1 / 12
ஆண்டு முழுவதும் நல்ல மழை, நல்ல மகசூல் கிடைத்திட வேண்டுமென, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே வீரமரசன்பேட்டை பகுதியில் உள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஓரே இடத்தில் பொன்னேர் பூட்டும் திருவிழாவை நடத்துவது வழக்கம்.
2 / 12
சித்திரை மாதத்தில் உழவு ஓட்டி சூரிய பகவானிடம் வேண்டிக் கொண்ட பின்னர் தான் விவசாயிகள் தங்களது நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்வது வழக்கம். அதன்படி சித்திரை மாதம் பிறந்ததும் நல்ல நாள் பார்த்து விவசாயிகள் பொன்னேர் பூட்டும் நிகழ்வுகள் டெல்டா மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பாரம்பரிய முறைப்படி வழக்கமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
3 / 12
பூதலூர் அருகே வீரமரசன்பேட்டையில் பொன்னேர் பூட்டும் திருவிழாவுக்காக பூதலூர், பூதராயநல்லூர், ஆவாரம்பட்டி, செல்லப்பன்பேட்டை உள்படக் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பூதலூர் நாச்சியாரம்மன் கோயிலில் பூஜைகள் செய்துவிட்டு விதை நெல், ஏர் கலப்பை, மாட்டு வண்டி ஆகியவற்றுடன் ஊர்வலமாக பூதலூர் - செங்கிப்பட்டி நெடுஞ்சாலையில் வீரமரசன்பேட்டை நான்குவழி சந்திப்பு பகுதியில் உள்ள இந்திரன் கோட்டம் வயலுக்குச் சென்று அங்கும் வழிபாடு நடத்தினர்.
4 / 12
தொடர்ந்து அங்கு ஏர் கலப்பை பூட்டி வயலை உழுது விதை நெல்லை விதைத்தனர். இந்த ஆண்டு நல்ல மழை பெய்து குறுவை, சம்பா, தாளடி என்று முப்போக நெல் சாகுபடி நடைபெற வேண்டும். மானாவாரிப் பகுதியிலும் நல்ல மகசூல் பெற வேண்டும் என விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்று வழிபாடு நடத்தினர். பின்னர் தங்கள் வயல்களில் மாடுகளை ஏர்கலப்பையில் பூட்டி வயல்களை உழுது பணியைத் தொடங்கினர்.
படங்கள் - ஆர்.வெங்கடேஷ்
5 / 12
6 / 12
7 / 12
8 / 12
9 / 12
10 / 12
11 / 12
12 / 12