1 / 16
புதுச்சேரி அரசின் வேளாண் துறை சார்பில் அனைவரையும் கவரும்காய்கறி, கனி மற்றும் மலர் கண்காட்சி ஏஎப்டி மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. மலர் மற்றும் காய்கறிகளில் விலங்குகள் மற்றும் பறவைகள் வடிவமைக்கப்பட்டு்ள்ளன. படங்கள்:எம்.சாம்ராஜ்
2 / 16
ஏராளமான மலர்கள் பார்வைக்காக உள்ளன. வேளாண் மற்றும் தோட்டக் கலைக்கு தேவையான சாதனங்கள் மற்றும் வழிகாட்டுதலும் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. புதுவை அரசின் வேளாண் நலத் துறை சார்பில் 33-வது மலர், காய், கனி கண்காட்சி மற்றும் வேளாண் திருவிழா நேற்று தொடங்கி நாளை (பிப்.12) வரை கடலுார் சாலை ஏஎப்டி மைதானத்தில் நடக்கிறது.
3 / 16
இதன் தொடக்க விழாவிற்கு வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை வகித்தார். அரசு செயலர் குமார் வரவேற்றார். ஆளுநர் தமிழிசை மலர், காய், கனி கண்காட்சியை திறந்து வைத்தார். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த 13 ஆயிரம் அலங்கார செடிகள், மலர் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
4 / 16
விழாவில் முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்,அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமார், எம்எல்ஏ அனிபால் கென்னடி,இயக்குநர் பாலகாந்தி ஆகியோர் பங்கேற்றனர். கண்காட்சியை தொடங்கிவைத்த ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர், தானியங்க ளால் தயாரிக்கப்பட்ட ஆயிமண்டபம், வண்ண மலர்களால்அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த லட்சுமி யானை, மயில், பென்குயின் அலங்காரத்தை பார்வையிட்டனர்.
5 / 16
கண்காட்சியில் திராட்சையில் வடிவமைக்கப்பட்ட மாடுகள், அன்னாசியில் வடிவமைக்கப்பட்ட முதலை, பாகற்காயில் டைனோசர், மலர்களில் மாட்டுவண்டி, காய்கறி களில் பறவைகள் என பல்வேறு வடிவங்கள் பார்வையாளர்களை கவரும் விதத்தில் இருந்தன.
6 / 16
மேலும் புதிய விதைகள், உரங்கள், பயிர் பாதுகாப்பு ரசாயனம், வேளாண் சார் இயந்தி ரங்கள், உபகரணங்கள், புதிய திட்டங்கள், நவீன தொழில்நுட்பங்கள் பார் வைக்கு வைக்கப் பட்டிருந்தன.
7 / 16
வேளாண்துறையால் உற்பத்தி செய்யப்பட்ட 33 ஆயிரம் மலர்ச் செடிகளும் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
8 / 16
இக்கண்காட்சியில் பாசிக் மற்றும் தனியார் விற்பனையாளர்கள் சார்பில் தரமான மலர், கனி, அலங்கார செடி வகைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தோட் டக் கலையினரால் 33 ஆயிரம் மலர்செடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
9 / 16
மாடித் தோட்டம், தொட்டி வளர்ப்பு, மூலிகை தோட்டம், வீட்டுத் தோட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் போட்டி களும் நடத்தப்படுகின்றன. நாளை நடைபெறும் நிறைவு விழாவில் ‘மலர் ராஜா’, ‘மலர் ராணி’ பட்டம் வழங்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
10 / 16
முதல் நாளான நேற்றே குறிப்பிட்ட அளவில் கூட்டத்தை காண முடிந்தது. மலர்களில் யானை, காய்கறிகளில் டைனோசர், மயில், முதலை, மாடுகள் உள்ளிட்ட காட்சிகளுடன் பார்வையாளர்கள் செல்ஃபி எடுத்துக கொண்டனர்.
11 / 16
கண்காட்சியை சுற்றிப் பார்த்த பெண்கள் கூறுகையில், "2 ஆண்டுகளுக்குப் பிறகு கண்காட்சி நடத்து வது மகிழ்ச்சி, ஆயிமண்டபம், பென் குயின், யானை போன்ற உருவங்கள் மலர்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது அழகாக இருக்கிறது. வித்தியாசமான பல நிறங்களில் பூக்கள் இருக்கின்றன. எங்களிடம் இல்லாத செடிகளை தேடி வாங்க பார்க்கிறோம்.
12 / 16
காய்கறி விதைகள் அதிகளவில் உள்ளன. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இங்கு நடத்துவதைத் தவிர்த்து, வழக்கம் போல் தாவரவியல் பூங்காவில் இயற்கை சூழலில் இந்நிகழ்வை நடத்தியிருக்கலாம்” என்று தெரிவித்தனர்.
13 / 16
14 / 16
15 / 16
16 / 16