Published on : 10 Apr 2025 16:38 pm
சர்க்கரை நோய், சிறுநீரகக் கற்கள், உடல் பருமன், பற்களுக்கு பிரச்சினை என மென்பானம் (Soft drinks) பருகுவதால் வரும் ஆபத்துகளின் அணிவகுப்பு நீளமானது.
இயற்கையில் தாகத்தைத் தணிக்கும் ஆற்றல் தண்ணீருக்குத்தான் உள்ளது. ஆகவே, கோடைக் காலத்தில் தினமும் 3-ல் இருந்து 5 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.
பாட்டில் நீரைவிட கொதிக்கக் காய்ச்சி, ஆறவைத்த தண்ணீரே சுகாதாரமானது. இதைக் குளிரக் குளிரக் குடிக்க, மண்பானையில் ஊற்றிவைத்து குடிப்பதே ஆரோக்கியம்.
தண்ணீருக்கு அடுத்து, தாகம் தணிக்க உதவுவது இளநீர், நீர்மோர், சர்பத், பானகம், பதநீர். இயற்கைப் பழங்கள், பழச்சாறுகளும் இதற்கு உதவும்.
தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், பழச்சாறுகள் நல்லது.
எலுமிச்சம் பழச்சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது, கோடைக் காலத்தில் குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பெற உதவும்.
கோடையில் குடிக்க இளநீர்தான் மிகச் சிறந்த சத்தான பானம். இளநீரை தண்ணீரில் போட்டு வைத்து, ஒரு மணி நேரம் கழித்து வெட்டிக் குடிப்பது நற்பலன் தரும்.
இளநீரைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துச் சில மணி நேரம் கழித்துக் குடித்தால், இளநீரின் மருத்துவக் குணங்கள் மாறிவிடும்.
இளநீரில் உள்ள தாதுக்கள் உடலின் வெப்பநிலையை உள்வாங்கி, உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால், நீரிழப்பு பாதிப்புகள் உடனே குறையும். | படங்கள்: மெட்டா ஏஐ