Published on : 03 Apr 2025 17:27 pm
தொடர்ச்சியான வாயுத் தொந்தரவு, சிறிதளவு காரமான உணவு சாப்பிட்டாலும் வயிற்றில் எரிச்சல், அவ்வப்போது வயிறு வலி இருந்தால் மருத்துவரை நாட வேண்டும்.
‘இரைப்பை அழற்சி’ (Gastritis) பிரச்சினையை கவனிக்கத் தவறினால், நாளடைவில் இரைப்பைப் புண் (Peptic ulcer) ஆக மாறிவிடும் ஆபத்து உண்டு.
இரப்பை பிரச்சினை வராமல் தடுக்க நாம் வாழ்க்கை முறையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அப்போதுதான் நம் வயிற்றுப் பிரச்சினை சரியாகும்.
முதலில் நேரத்துக்கு உணவு சாப்பிட வேண்டும். அடிக்கடி சிறிது சிறிதாக உணவை உண்பது நல்லது. எந்தக் காரணத்தைக் கொண்டும் பட்டினி கிடக்கக் கூடாது.
சாப்பிட்டதும் படுக்கக் கூடாது. புகைப் பிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. பான்மசாலா பயன்படுத்தக் கூடாது.
மருத்துவர் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளை தேவையின்றியும், அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.
மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும்.
துரித உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். புளித்த உணவு வகைகளை ஒதுக்குங்கள். சாஃப் டிரிங்ஸ் வேண்டாம். காபி, தேநீர் குறைப்பீர்.