Published on : 02 Apr 2025 17:04 pm
பால் ஒரு சத்துப் பொருள்தான் என்றாலும், பல வகை பாக்டீரியா வளர்வதற்கான சிறந்ததொரு ஊடகமாகவும் உள்ளது.
பாலை கொதிக்க வைத்து பின்னர் ஆறவைத்துக் குடித்தால் பாக்டீரியா ஆபத்து மறைந்துவிடும்.
பாலின் கொதிநிலை 100.2 டிகிரி செல்சியஸ். இந்த வெப்பத்தில் பாலை சுமார் 2 நிமிடங்களுக்குக் கொதிக்க வைக்க வேண்டும்.
பாலை சரியாக கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள அனைத்து பாக்டீரியாவும் இறந்துவிடும். அதன்மூலம் பால் சுத்தமாகும்.
விலங்கினப் பால்களில் காசநோய், டைபாய்டு கிருமிகள் இருக்குமானால், அதை காய்ச்சாமல் குடிப்பவர்களுக்கு அந்த நோய்கள் வரலாம்.
பாலைக் கொதிக்க வைத்து ஆறவைத்துக் குடிக்கும்போது பாக்டீரியா இறந்து விடும் என்பதால், நோய்களும் வரும் வாய்ப்பு குறைவு.