Published on : 27 Mar 2025 11:42 am
உலகச் சுகாதார நிறுவனத்தின் (WHO) கூற்றுப்படி, புகைப்பதை நிறுத்திய 20 நிமிடங்களுக்குள், நம் இதயத் துடிப்பும் ரத்த அழுத்தமும் குறையும்.
புகைப்பதை நிறுத்திய 12 மணி நேரத்திற்குள், ரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு இயல்பு நிலைக்குத் திரும்பி விடும்.
புகைப்பதை நிறுத்திய 2 முதல் 12 வாரங்களுக்குள், நம் ரத்த ஓட்டம் மேம்படும்; நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கும்.
புகைப்பதை நிறுத்திய 1 முதல் 9 மாதங்களுக்குப் பிறகு இருமல், மூச்சுத் திணறல், இளைப்பு, களைப்பு போன்றவை குறையும்.
புகைப்பதை நிறுத்திய ஒரு வருடத்தில், மாரடைப்புக்கான ஆபத்து பாதியாகக் குறைந்திருக்கும்.
புகைப்பதை நிறுத்திய 5 வருடங்களுக்குப் பிறகு, பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியம் புகைப் பிடிக்காதவர்களுக்கு உள்ளதுபோல் குறைந்திருக்கும்.
புகைப்பதை நிறுத்திய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் பாதியாகக் குறைந்து விடும்.
புகைப்பதை நிறுத்திய 15 வருடங்களுக்குப் பிறகு, மாரடைப்புக்கான சாத்தியம், புகைப் பிடிக்காதவர்களுக்கு இருப்பதைப் போலவே மாறியிருக்கும்.