Published on : 25 Mar 2025 17:14 pm
தீவிர மதுப் பழக்கத்தால் கல்லீரல், கணையம், இரைப்பை ஆகியவை கெடுவது தொடங்கி புற்றுநோய் பாதிப்பு வரை பல ஆபத்துகள் உள்ளன.
எவருமே மது அருந்தக் கூடாது என்றாலும், மதுவை கட்டாயம் தொடவே கூடாதோர் என மருத்துவர்கள் இடும் பட்டியலில் இடம்பெறுவோர்...
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள். ஆஸ்பிரின், ‘ஸ்டாடின்’ மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறவர்கள்.
இரைப்பைப் புண், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் உள்ளவர்கள்.
குடும்ப வரலாற்றில் இதயநோய் உள்ளவர்கள். இதயநோயாளிகள். இதயத் துடிப்பில் பிரச்சினை உள்ளவர்கள்.
ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள்.
கல்லீரல், கணையம் பாதிக்கப்பட்டவர்கள். அதாவது, ‘கொழுப்புக் கல்லீரல்’ (Fatty liver), ‘கல்லீரல் சுருக்க நோய்’ (Liver cirrhosis)...
கல்லீரல் செயலிழப்பு, கணைய அழற்சி போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் கட்டாயம் மதுவைத் தொடவே கூடாது!