Published on : 17 Mar 2025 17:15 pm
நம் உடலில் இருந்து அதிகமான நீர் வெளியேறுவதால் உடலில் நீரிழப்பு (Dehydration) ஏற்படுகிறது. கோடையில் இந்த பாதிப்பு அதிகம் வரலாம்.
ஆண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 3.7 லிட்டர் நீரும், பெண்கள் 2.5 லிட்டர் நீரும் பருகவேண்டும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
நீரிழப்பு பாதிப்பால் தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல், மயக்கம், உடல்வலி, சோர்வு, அசதி போன்ற தொல்லைகள் எளிதில் ஏற்படும்.
குறிப்பாக, நீரிழப்பால் ரத்த அழுத்தம் குறையும். உடல்வலி, தலைவலி, தோல் வறட்சி, வெப்பத் தளர்ச்சி, வெப்ப மயக்கம் ஏற்படலாம்.
கோடையில் அதிகமாகத் தேநீர் அருந்துவதைக் குறைக்க வேண்டும். காபியில் உள்ள ‘கஃபீன்’ உடலில் அயர்ச்சியை உண்டாக்கும்.
மோரை தேவைக்கேற்ப குறைந்தபட்ச உப்பு கலந்து பருகினால், கோடையில் நீர் - உப்பு இழப்பு உடனடியாகச் சீராகிக் கோடைச் சோர்வு அகலும்.
மோரில் வைட்டமின் டி, தாது உப்பு, கால்சியம், புரதம், மாவுச்சத்து, கொழுப்பு உள்ளதால் கோடையில் உடல் சோர்வு எளிதில் சரியாகும்.
மோர், அரிசிக் கஞ்சி, பழைய சாதம், இளநீர், நுங்கு, பதநீர் போன்றவையும், சர்க்கரை சேர்க்காமல் ஜூஸ் அருந்துவதும் உடலுக்கு நன்மை பயக்கும்.
குறிப்பாக, தர்பூசணி நீர் நிறைந்த பழம். கோடையில் நீரிழப்பை எளிதில் இது ஈடுசெய்யும். எலுமிச்சைச் சாறில் சிறிதளவு உப்பு சேர்த்து அருந்தலாம்.
அதிக அளவு நீர்ச்சத்து வெள்ளரி, நீரிழப்பால் ஏற்படும் சிறுநீர்க்கடுப்பை குறைக்கிறது. சிறுநீர் கல் கரையவும் இது உதவுகிறது.