Published on : 14 Mar 2025 18:30 pm
மிக எளிய முறையில் மூன்றே கேள்விகளில், நாம் சர்க்கரை நோயின் ஆபத்தான நிலையில் இருக்கிறோமா இல்லையா எனக் கண்டறிய முடியும்.
1. உங்கள் பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா? 2. நீங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்வதுண்டா? 3. உங்களுக்கு என்ன வயது? என மூன்று கேள்விகளுக்கு பதில்.
இதில் முதல் கேள்விக்கு ஆம் என்றும் இரண்டாவது கேள்விக்கு இல்லை என்றும் கூறினீர்கள் என்றால், உடனே ஒரு இன்ச் டேப் எடுத்து வயிற்றைச் சுற்றி அளந்து பாருங்கள்.
ஆண்களுக்கு 90 செ.மீக்கு மேல், பெண்களுக்கு 80 செ.மீக்கு மேல் இருந்தால் நீங்கள் சர்க்கரை நோயின் பாதிப்புகளை எதிர்கொள்வீர்கள். வயது அதிகரிக்க, இந்த ஆபத்துகளும் அதிகரிக்கும்.
நீரிழிவுக்கு முந்தைய நிலை என்பது நீரிழிவு நோய் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வதற்குக் கிடைத்திருக்கும் அவகாசமாக நினைத்துக்கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள், முறையான உணவு, உடற்பயிற்சி மேற்கொண்டால் சர்க்கரை அளவுகள் சாதாரண நிலைக்குத் திரும்பவும் கூடும்.
மாவுச்சத்தைக் குறைத்து புரதச்சத்தை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். புரதம் அதிகமாக எடுத்துக் கொண்டால், உடல் எடை கூடாது.
வெள்ளை சர்க்கரை போலவே நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, பனங்கற்கண்டு சாப்பிட்டாலும் ஆபத்து தான்.
வெள்ளை சர்க்கரையைவிட நாட்டு சர்க்கரையில் சர்க்கரை அளவு சற்று குறைவாக இருக்கலாம். ஆனால், அதனால் சர்க்கரை அதிகரிக்காது என்பது தவறான கருத்து.
பெண்கள் செய்யும் வீட்டு வேலைகள் கலோரியை குறைக்க உதவுவதில்லை. எனவே உடல் பருமனை தவிர்க்கும் நோக்கில் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். | தொகுப்பு: கு.கணேசன்