Published on : 13 Mar 2025 18:43 pm

பருக்களைப் போக்க என்ன செய்யலாம்?

Published on : 13 Mar 2025 18:43 pm

1 / 8

இன்றைய தினம் ‘பருக்களைப் போக்க என்ன செய்யலாம்?’ என்று சிந்திக்காத பெண்களே கிடையாது. பருக்கள் வராமல் தடுக்க மருத்துவர் தரும் டிப்ஸ்கள் சில...

2 / 8

முகத்தில் எந்தக் களிம்பைப் பூசினாலும், 20 நிமிடங்களுக்கு மேல் அதை வைத்திருக்கக் கூடாது. காரணம், எண்ணெய்ச் சுரப்பிகள் அடைபட்டு முகப்பருவுக்கு வழி அமைத்துவிடும்.
 

3 / 8

தினமும் குறைந்தது மூன்று முறை முகத்தைச் சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

4 / 8

அடிக்கடி சோப்பை மாற்றக் கூடாது. சுத்தமான பருத்தித் துண்டால் முகத்தைத் துடைக்க வேண்டும். முகத்தைத் துடைப்பதற்கென்று தனியாக வைத்துக்கொள்வது நல்லது.

5 / 8

தினமும் இருமுறை வெந்நீரில் ஆவி பிடிப்பது நல்லது. முகத்தில் எண்ணெய்ப் பசை உள்ளவர்கள் அழகூட்டும் களிம்புகளைப் பயன்படுத்த மருத்துவரின் ஆலோசனை தேவை.

6 / 8

கண்ணாடியின் முன்னால் நின்றுகொண்டு பருக்களை விரல்களால் நோண்டுவதை கைவிடுங்கள். பருக்களைக் கிள்ளாதீர்கள்; பிதுக்காதீர்கள்.

7 / 8

நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.
 

8 / 8

இறைச்சி, நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாலாடை, முட்டை, கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், பீட்சா, பர்கர், எண்ணெய் பலகாரம் ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள். | தொகுப்பு: கு.கணேசன் 
 

Recently Added

More From This Category

x