healthy tips for drink water
healthy tips for drink water

தண்ணீர்... யாருக்கு மிகவும் அவசியம்?

Updated on
2 min read

சராசரி எடையுள்ள ஒருவரது உடலில் 60 - 70% தண்ணீர்தான் இருக்கிறது. எளிதாகச் சொல்ல வேண்டுமானால், 60 கிலோ எடையுள்ள ஒருவரின் உடலில் சுமார் 34 லிட்டர் தண்ணீர் இருக்கிறது.

தண்ணீர் இல்லாமல் உடலில் எந்த செல்லும் இயங்க முடியாது. உடலில் உள்ள எல்லா செல்களுக்கும் தண்ணீர் தேவை. திசுக்களுக்குத் தண்ணீர் தேவை.

ரத்த உற்பத்திக்கு, செல்களின் வளர்சிதைமாற்றப் பணிகளுக்கு, வளர்ச்சிப் பணிகளுக்குச் சரியான ஊடகம் தண்ணீர்தான்.

ரத்த ஓட்டத்துக்கு, சுவாசத்துக்கு, உணவு செரிமானத்துக்கு, வியர்ப்பதற்கு, சிறுநீர் கழிப்பதற்கு, உடலின் வெப்பத்தைச் சமப்படுத்துவதற்கு தண்ணீர் தேவை.

வயது, உடல் எடை, உடல் உழைப்பு, உணவுப் பழக்கம், காலநிலை, நோய்நிலை எனப் பல காரணிகள் ஒருவருடைய தண்ணீர்த் தேவையை தீர்மானிக்கின்றன.

ஆரோக்கியமான ஒருவர் தினமும் 2,400-ல் இருந்து 3,000 மில்லி லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது, ஒரு கிலோ உடல் எடைக்கு 35 மி.லி. தண்ணீரை தினமும் அருந்தணும்.

தினமும் தேவையான தண்ணீரை அருந்தும் பழக்கம் எல்லோருக்கும் அவசியம்தான் என்றாலும், புகை பிடிப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்...

நீரிழிவு நோயாளிகள், பிறவி இதயநோய் உள்ளவர்கள், ஏற்கெனவே மாரடைப்பு வந்து சிகிச்சை பெறுபவர்கள், கர்ப்பிணிகள், சுருள் சிரை நோய் (Varicose vein) உள்ளவர்கள்... 
 

அடிக்கடி அதிக தூரம் பயணம் செய்பவர்கள், காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய் உள்ளவர்கள், வெயிலில் வேலை செய்பவர்கள்...

இவர்கள் தேவைக்கு ஏற்ப தவறாமல் தண்ணீர் அருந்தணும். மாரடைப்பை தடுக்க உதவும் வழிகளில் இதுவும் ஒன்று. | கைடன்ஸ்: பொதுநல மருத்துவர் கு.கணேசன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in