Published on : 30 Jan 2025 18:15 pm
ஆஸ்துமாவை முற்றிலும் குணப்படுத்த முடியாது; பாதிப்பைக் கட்டுப்படுத்தி வாழ்வது மட்டுமே நம் முன் இருக்கும் ஒரே வழி.
ஆஸ்துமா நோயாளிகளின் வீட்டிலும் அலுவலகத்திலும் உள்ள தூசியையும் குப்பையையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம்.
ஒட்டடை அடித்தல், வெள்ளை அடித்தல், வர்ணம் பூசுதல் போன்ற பணிகளில் ஆஸ்துமா நோயாளிகள் ஒருபோதும் ஈடுபடக் கூடாது.
மாவுமில் நெடி, தூசி, சிமெண்ட் மாசு, ஆஸ்பெஸ்டாஸ் மாசு, நூற்பாலைக் கழிவு போன்றவை ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆகாது.
ஆஸ்துமாவைத் தூண்டுகிற முக்கிய காரணியாகப் பூக்களின் மகரந்தம் உள்ளது. பூக்கள் பூக்கின்ற இளங்காலை பொழுதில் தோட்டத்துக்குள் செல்லக் கூடாது.
ஆஸ்துமா நோயாளிகள் வளர்ப்புப் பிராணிகளைக் கண்டிப்பாக வளர்க்கக் கூடாது.
ஆஸ்துமா நோயாளிகள் படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி மாற்ற வேண்டும்; கம்பளிப் போர்வையைப் பயன்படுத்தவே கூடாது.
வாசனைத் திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது; ஊதுவத்திகள், கொசுவிரட்டிகள், சாம்பிராணிப் புகை, கற்பூரம் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
முக்கியமாக, புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும். குடிப்பழக்கமும் கண்டிப்பாக இருக்கக் கூடாது.
ஆஸ்துமாவுக்கு நாம் சாப்பிடும் உணவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எந்த உணவால் ஆஸ்துமா ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அந்த உணவைத் தவிர்ப்பது அவசியம்.
ஆஸ்துமாவுக்கு மாத்திரை, மருந்து, ஊசிகளைப் பயன்படுத்தும்போது, அவை பலன் தருவதற்குச் சிறிது காலம் ஆகலாம்.
இன்ஹேலரைப் பயன்படுத்தும்போது அதிலிருக்கும் மருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று மூச்சுக்குழாயின் தசைகளைத் தளர்த்திவிடும்; மூச்சுத் திணறலிலிருந்து உடனடி விடுதலையும் கிடைக்கும்.
வெது வெதுப்பான தண்ணீரை அடிக்கடி அருந்துவது நல்லது. தினமும் நீராவி பிடிப்பதும் மூச்சுப்பயிற்சியில் ஈடுபடுவதும் நல்ல பலன் தரும். | தகவல்கள்: டாக்டர் எம். அருணாசலம்