Published on : 29 Jan 2025 16:40 pm
அலுவலகத்தில் முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போது, கீழ் முதுகுக்கு சிறிய தலையணை வைத்துக் கொள்ளலாம்.
கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும். ஒரே மாதிரியான நிலையில் வேலை செய்யும்போது, அவ்வப்போது உடலின் நிலையை மாற்றிக்கொள்ளுங்கள்.
மணி கணக்கில் ஒரே நிலையில் உட்கார்ந்தவாறு வேலை செய்யாதீர்கள். நடுவில் சிறிதளவு ஓய்வு அவசியம். உட்காரும்போதும் கால்களின் நிலைகளை மாற்றுங்கள்.
சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் ஏதாவது ஒன்றைச் செய்வது, முதுகு வலி வராமல் தடுக்கும்.
காற்றடைத்த பானங்கள், குளிர் பானங்கள், மென் பானங்கள், கோக் கலந்த பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
கால்சியம், புரதம் மிகுந்த பால், முட்டை வெள்ளைக் கரு, சோயா, உளுந்து. கொண்டைக் கடலைப் போன்ற உணவு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதிக எடையைத் தூக்கக் கூடாது. முதுகை அதிகமாக வளைக்கக் கூடாது. திடீரெனத் திரும்பக் கூடாது. வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தினால் நல்லது.
உயரமான காலணிகளை அணியக் கூடாது. பைக்கில் கரடு முரடான பாதைகளில் செல்வதை குறைக்கலாம். காரில் நிமிர்ந்து ஸ்டியரிங் அருகில் அமர்ந்து ஓட்ட வேண்டும்.
முதுகு வலி உள்ளவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது நடுவிலுள்ள இருக்கையில் உட்கார்ந்து பயணிப்பது நல்லது.
உடல்பருமன் ஆவதைத் தவிருங்கள். புகை பிடிக்காதீர்கள். மது அருந்தாதீர்கள். போதை மாத்திரை சாப்பிடாதீர்கள். மன அழுத்தத்தைத் தவிருங்கள்.