Published on : 29 Jan 2025 15:26 pm
பலருக்கு சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படும். சிலருக்குப் பசிக்கும்போது ஏற்படும். பொதுவாக இரவு நேரத்தில்தான் அதிகமாக இருக்கும்.
அதிகக் கார உணவு, துரித உணவு, கொறிக்கும் உணவை அடிக்கடி சாப்பிடுவது, நொறுக்கு தீனிகளால் வயிற்றை நிரப்புவது நெஞ்செரிச்சலை தூண்டும்.
காலை உணவைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் சாப்பிடாதது, பசிக்கும் நேரத்தில் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாததும் முக்கிய காரணங்கள்.
இரவில் தாமதமாக உறங்குவது, கவலை, மன அழுத்தம் போன்றவையும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன.
நெஞ்செரிச்சலை உடனடியாகக் குறைக்க இளநீர் சாப்பிடலாம். புளிப்பில்லாத மோர் குடிக்கலாம். நுங்கு சாப்பிடலாம்.
ஜெலுசில், டைஜீன் போன்ற அமிலக் குறைப்பு மருந்துகளில் ஒன்றை 15 மி.லி. அளவில் குடிக்கலாம்.
இவை எதுவும் கிடைக்காத நேரத்தில், குளிர்ந்த நீரைக் குடித்தால்கூட நெஞ்செரிச்சல் குறையும்.
மது அருந்துவது, புகைபிடிப்பது, புகையிலை / பான்மசாலா போடுவது இந்த மூன்றும் நெஞ்செரிச்சலுக்கு முக்கிய எதிரிகள்.
அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது முக்கியம்.