யானையின் பிளிறல் எவ்வளவு தூரம் கேட்கும்?
Published on : 10 Jan 2025 18:50 pm
1 / 17
நிலத்தில் வாழும் மிகப் பெரிய உயிரினம் யானை. சிங்கம் நேருக்குநேர் தாக்க வந்தால் யானை வென்றுவிடும். வலிமையானது யானை.
2 / 17
ஏன் யானைகள் பிளிறுகின்றன? யானைகள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. பிளிறலும், தும்பிக்கை அசைவும், காது அசைவும் அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன.
3 / 17
யானை பிளிறும் சத்தம் கேட்டால் நமக்கு அச்சமாக இருக்கும் அல்லவா? ஆனால், ‘வ்ஹாஹாஹான்ன்ன்ன்’ என்கிற பிளிறலுக்கு ‘ஹலோ’ என்று அர்த்தம்.
4 / 17
யானைகள் பெரும்பாலும் கூட்டம் கூட்டமாகவே வசிக்கும். அந்தக் கூட்டங்களுக்குப் பெண் யானைகளே தலைமை வகிக்கின்றன.
5 / 17
மூத்த பெண் யானை கூட்டத்தின் தலைவியாக இருக்கும். ஆண் யானைகள் தனியாக வாழ்ந்து, சில நேரம் மட்டுமே கூட்டத்துடன் வந்துசேர்கின்றன.
6 / 17
காட்டுக்குள் பல யானைக் கூட்டங்கள் வசித்து வருகின்றன. அவை தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழியே நமக்குப் பிளிறலாகக் கேட்கிறது.
7 / 17
குட்டி யானைகள் குறும்பானவை. அவற்றைக் கட்டுப்படுத்த, சில நேரம் பெரிய யானைகள் பிளிறும்.
8 / 17
தொலைவில் உள்ள யானைகளுடன் பேசக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளை யானைகள் எழுப்புகின்றன. இதற்கு ‘இன்ஃப்ராசோனிக் அதிர்வுகள்' என்று பெயர்.
9 / 17
‘இன்ஃப்ராசோனிக்’ அதிர்வுகள் நீண்ட அலை நீளம் கொண்டவை. இதனால் அவை, அடர்ந்த காடுகளில் எந்தத் தடையும் இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
10 / 17
காற்று வழியாகச் செல்வதுபோல், நிலத்தின் வழியாகவும் பல கிலோமீட்டர் தூரம் இந்த அலைகள் பயணம் செய்யும்.
11 / 17
நிலத்தின் வழியே செல்லும் அதிர்வுகள் யானைகளின் கால்கள் வழியாக உடலுக்குள் சென்று, மூளைக்குச் செல்கின்றன. மூளை அந்த அதிர்வுகளைச் செய்தியாக உணர்கிறது.
12 / 17
எந்த யானை, எந்த மனநிலையில் இதை அனுப்பியுள்ளது என்று மற்ற யானைகளுக்குத் தெளிவாகத் தெரியும். ஆபத்து வரும்போது எச்சரிக்கை செய்கின்றன.
13 / 17
ஒலி, அதிர்வு மட்டுமல்ல, தொடுதலும் ஒருவிதமான தகவல் பரிமாற்றம்தான். அதில் யானைகளின் தும்பிக்கை ஒரு முக்கியமான தகவல் பரிமாற்றக் கருவி!
14 / 17
காதுகள் கேட்பதற்கு மட்டுமல்ல. காது மடல்களின் அமைப்பின் மூலம் தன் உணர்வுகளையும் யானை வெளிப்படுத்துகிறது.
15 / 17
விரிந்த காதுகள் என்றால் ஆபத்து அல்லது எச்சரிக்கை என்று அர்த்தம்.
16 / 17
தளர்வான காதுகள் என்றால் அமைதியான மனநிலையில் இருக்கிறது.
17 / 17
காதுகளை அடிக்கடி அசைத்தால், யானை பரபரப்பு அல்லது மன அழுத்தத்தில் இருக்கிறது என்று அர்த்தம். | தகவல்கள்: நஸீமா ரஸாக்