அரசுப் பள்ளி to இஸ்ரோ தலைவர் - நாராயணன் பின்புலம் என்ன?
Published on : 10 Jan 2025 11:15 am
1 / 8
இஸ்ரோவின் புதிய தலைவரான கன்னியாகுமரியை சேர்ந்த வி.நாராயணன் (60) தனது பயணம் மூலம் கல்வியின் மகத்துவத்தை நிரூபித்துள்ளார்.
2 / 8
ஏழைக் குடும்பத்தில் பிறந்த நாராயணன் 8-ம் வகுப்பு வரை மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தார்.
3 / 8
மேலக்காட்டுவிளை அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், சியோன்புரம் அரசு உதவிபெறும் பள்ளியில் 10-ம் வகுப்பையும் முடித்தார்.
4 / 8
நாகர்கோவில் அருகே கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ முடித்த அவருக்கு இஸ்ரோவில் வேலை கிடைத்தது.
5 / 8
பணியில் இருந்தபடி இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார். கோரக்பூர் ஐஐடி-யில் எம்.டெக். ஏரோ ஸ்பேஸ் பொறியியலில் பிஹெச்.டி. பெற்றார்.
6 / 8
தனது 20-வது வயதிலேயே டெக்னீஷியனாக பயணத்தைத் தொடங்கி 40 ஆண்டுகளாக இஸ்ரோவின் பல சாதனைகளின் பின்னணியில் இருந்தவர்.
7 / 8
இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமிக்கப்படுவது இது 3-வது முறை. மூவருமே குமரியைச் சேர்ந்தவர்கள் என்பது தனி சிறப்பு.
8 / 8
இதுவரை 25+ விருதுகளைப் பெற்றுள்ள நாராயணன், இஸ்ரோ தலைவராக தொடர்ந்து சாதனை புரிவார் என்று உறுதியாக நம்பலாம்.