கோவேறு கழுதை vs கழுதை - ஒரு பார்வை
Published on : 12 Dec 2024 20:25 pm
1 / 9
கழுதை, கோவேறு கழுதைகளிடமும் பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடியாது. ஆனால் இரண்டும் உருவம், குணம் சார்ந்து வெவ்வேறு விலங்குகள்.
2 / 9
கழுதை வீட்டுப் பிராணியாகும். பாதத்தில் பிளவுபடாத குழம்புகளைக் கொண்ட பாலூட்டி. குதிரை போன்ற உடலைமைப்பைக் கொண்டது.
3 / 9
குதிரையைவிட கழுதை உடல் அளவில் சிறியது. கழுதையின் வாலில் ரோமம் குறைவாக இருக்கும். பிடரி மயிரும் கழுதைக்குக் கொஞ்சம்.
4 / 9
ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்த கலப்பினப் பிராணியே கோவேறு கழுதை.
5 / 9
கழுதைகள் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டு குட்டி போடும். கோவேறு கழுதைகள் இனப்பெருக்கம் செய்ய முடியாது.
6 / 9
கோவேறு கழுதைகள் வேலைக்குச் சிறந்தவை. கழுதைகளைவிட கோவேறு கழுதைகள் அதிக எடையைத் தாங்குபவை. அதிக எடையை ஏற்றினால் கழுதை மிகவும் கஷ்டப்படும்.
7 / 9
கோவேறு கழுதைகளால் சில அடி உயரத்துக்குக் குதிக்க முடியும். கழுதையால் குதிக்க முடியாது. கழுதைகளைவிட கோவேறு கழுதைகள் புத்திசாலிகள்.
8 / 9
கழுதைகளைவிட கோவேறு கழுதைகள் உயரமாக இருக்கும். கழுத்து, பற்களும்கூட கொஞ்சம் பெரியதாக இருக்கும்.
9 / 9
கழுதையின் கத்தலையும் கோவேறு கழுதை வெளிப்படுத்தும் சத்தத்தையும் தனி அடையாளம் காண முடியும். கோவேறு கழுதை குதிரையைப் போலக் கனைக்கும். | தொகுப்பு: ஷங்கர்