பாம்புக்கு நாக்குதான் மூக்கு
Published on : 06 Dec 2024 19:27 pm
1 / 10
பாம்புகள் ஊர்வன வகையைச் சேர்ந்த பிராணிகள். பாம்பு தனது நாக்கின் மூலம் வாசனையை அறிகிறது.
2 / 10
பாம்புகள் மாமிச உண்ணிகள். மனிதனின் மூதாதையர்களாகக் குரங்குகள் கருதப்படுவதைப் போல பாம்புகளுக்கு மூதாதையர் பல்லிகள் என்று கருதப்படுகின்றன.
3 / 10
பாம்புகளுக்குப் பற்கள் கிடையாது. அதனால் இரையை அப்படியே முழுமையாக விழுங்க வேண்டும். அதற்கேற்ற மாதிரி பாம்புகளின் கபாலத்தில் பலவகை இணைப்புகள் இருக்கும்.
4 / 10
பாம்புகள் ஒல்லியான உடலமைப்பைப் பெற்றிருப்பதால் அவற்றின் சிறுநீரகங்கள் பக்கவாட்டில் இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்திருக்கும்.
5 / 10
பாம்புகளுக்குக் கால்கள் கிடையாது. ஆனாலும் உடலால் நிலத்தில் ஊர்ந்து வேகமாக நகரும். சில பாம்புகள் நீரிலும் வேகமாக நீந்தும்.
6 / 10
பாம்புகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே நச்சுப் பாம்புகள் உள்ளன. இந்தியாவில் நல்ல பாம்பு, கட்டுவிரியன் ஆகியவை நச்சுப் பாம்பு வகையில் சேரும்.
7 / 10
பாம்புகளுக்குக் கண் இமைகள் கிடையாது. அண்டார்டிகா கண்டத்தைத் தவிர உலகின் சகல பகுதிகளிலும் பாம்புகள் உள்ளன.
8 / 10
பாம்பின் தோல் மென்மையாகவும் உலர்வாகவும் இருக்கும். அது சட்டை என்று அழைக்கப்படுகிறது. பாம்பு தனது தோல் சட்டையை ஆண்டுக்குப் பல முறை உரிக்கும்.
9 / 10
பாம்புகளிலேயே பெரிய அளவில் உள்ளவை மலைப்பாம்புகள்தான். 28 அடிவரை வளரக்கூடியவை. அனகொண்டாக்களும் நீளமானவை. 16 அடி நீளம். இவை விஷம் அற்றவை.
10 / 10
உலகிலேயே சிறிய அளவில் உள்ள பாம்பு, பார்படா த்ரெட் ஸ்நேக் எனப்படும் பாம்புதான். 10 சென்டிமீட்டர் அளவே இருக்கும். | தொகுப்பு: ஷங்கர்