பின்னோக்கிப் பறக்குமா தட்டான்கள்?
Published on : 05 Dec 2024 18:02 pm
1 / 14
உலகில் டைனோசருக்கு முன்பே உருவான உயிர் தட்டான்கள். தட்டான் பூச்சியின் வயது 30 கோடி ஆண்டுகள்.
2 / 14
ஊசி உடல், கண்ணாடிச் சருகு இறக்கை, உருண்டைக் கண்களைக் கொண்ட கண்ணைக் கவரும் வண்ணப்பூச்சிகள் தட்டான்கள்.
3 / 14
தட்டான் பூச்சியில் ஐந்தாயிரம் வகைகள் உள்ளன. தட்டான் பூச்சிகளுக்கு நான்கு இறக்கைகள், ஆறு கால்கள், தலை, வயிறு, மார்பு உண்டு.
4 / 14
தட்டான் பூச்சியின் உறுப்புகளிலேயே அதன் வயிறுதான் நீளமானது. அது அறை, அறையாகப் பிரிக்கப்பட்டது.
5 / 14
தட்டானால் நன்றாக நடக்க முடியாது. தட்டான்களால் வேகமாகப் பறக்க முடியும். பின்னோக்கியும் 50 கி.மீ. மைல் வேகத்தில் பறக்கும்.
6 / 14
நீரில் வாழும் சிறு உயிரினங்களைத் தட்டான்கள் உணவாக உட்கொள்கின்றன. பெரிய தட்டான்கள் மீன் குஞ்சுகளையும் சாப்பிடும்.
7 / 14
தட்டான்கள் நீர்ப் பகுதிகளுக்கு அருகில் வாழ்பவை. பெண் தட்டான்கள் முட்டைகளை நீரின் மேற்பரப்பிலேயே இடும்.
8 / 14
நூறு முதல் சில ஆயிரம் வரையிலான முட்டைகளை நீரிலோ, நீருக்கு அருகில் உள்ள பகுதிகளிலோ இடும்.
9 / 14
தட்டானின் இளம்புழுப் பருவம் நீரிலேயே கழியும். அதற்கு இறக்கைகள் இருக்காது. நீரில் மீன்களைப் போல் செவுள்களால் சுவாசிக்கும்.
10 / 14
இளம்புழுவாக இருக்கும்போ 17 முறை தோலுரித்த பிறகு தட்டான் தண்ணீரிலிருந்து வெளியே வரும். பின்னர் சிறகுகள் முளைத்துப் பறக்கும்.
11 / 14
தட்டான்களின் பார்வை மிகக் கூர்மையானது. எல்லாக் கோணங்களிலும் பொருட்களைப் பார்க்க உதவுகிறது அவற்றின் கூட்டுக் கண்கள்.
12 / 14
ஒவ்வொரு கூட்டுக் கண்ணிலும் சுமார் 30 ஆயிரம் லென்சுகள் உள்ளன. இந்தப் பார்வைத் திறன்தான் மோதாமல் இருக்க உதவுகின்றன.
13 / 14
பெண் தட்டான்களைக் கவர்வதற்காக ஆண் தட்டான்கள் கடுமையாக மோதிக்கொள்ளும்.
14 / 14
வேறு இடத்திலிருந்து வரும் ஆண் தட்டானை தனது எல்லைக்குள் வர அனுமதிக்காது. தட்டான் பூச்சிகளின் ஆயுட்காலம் ஓர் ஆண்டுதான். | தொகுப்பு: ஷங்கர்