Published on : 03 Dec 2024 19:22 pm

ஆந்தைகளுக்கு கொம்பு உண்டா?

Published on : 03 Dec 2024 19:22 pm

1 / 14

ஆந்தை இரவில் இரை தேடும் பறவை இனம். ஆந்தைகளில் 200 வகைகள் உள்ளன.
 

2 / 14

தட்டையான முகம் கொண்ட ஆந்தைகள் பெரிய கண்கள் கொண்டவை. சிலவகை ஆந்தைகளால் தலையை 360 டிகிரி வரை திருப்பிப் பார்க்க முடியும்.
 

3 / 14

தொலைவில் உள்ள இரையைக்கூட ஆந்தைகளால் தெளிவாகப் பார்க்க முடியும். ஆந்தைகள் சிறிய பிராணிகளையும் உணவாக உட்கொள்ளும். சில ஆந்தை வகைகள் மீன்களையும் வேட்டையாடும்.

4 / 14

ஆந்தைகளின் வலுவான நகங்கள் இரையைப் பிடிக்கவும் கொல்லவும் உதவியாக உள்ளன. அண்டார்க்டிகா தவிர மற்ற எல்லா நிலப்பரப்புகளிலும் ஆந்தைகள் உள்ளன.
 

5 / 14

ஆந்தையின் காதுகள் இரண்டும் வேறு வேறு அளவுகளில் இருக்கும். ஆந்தைகளுக்குக் கேட்கும் திறன் அதிகம்.

6 / 14

ஆந்தைகளால் பகலில் பார்க்க முடியாவிட்டாலும் இரை எழுப்பும் ஒலி மூலம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
 

7 / 14

நிறைய ஆந்தைகளுக்குத் தலையில் காது மடல்கள் கொம்புகள் போல அமைந்திருக்கும். ஆனால், அவை காதுகள் அல்ல. கொம்பு என்று அழைக்கப்பட்டாலும் அது சிறகுதான்.
 

8 / 14

ஆந்தைக்கு மூன்று இமைகள் உள்ளன. ஒன்றை மூடித் திறக்கவும், மற்றொன்றைத் தூங்குவதற்கும், இன்னொன்றைக் கண்ணை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கப் பயன்படுத்திக் கொள்ளும்.

9 / 14

ஒரு கூகை ஆந்தை ஆண்டுக்கு சராசரியாக ஆயிரம் எலிகள் வரை சாப்பிடும். அதனால் விவசாயியின் நண்பனாக ஆந்தை கருதப்படுகிறது.

10 / 14

ஆந்தை இறக்கை விரித்துப் பறக்கும்போது படபடவென சத்தம் கேட்காது. இரைக்கு அருகில் செல்லும் வரை சத்தம் வராது.
 

11 / 14

பெரும்பாலும் பெண் ஆந்தைகள் பெரியதாக இருக்கும். ஆக்ரோஷத்தை அதிகம் வெளிப்படுத்தும்.
 

12 / 14

பெரும்பாலான ஆந்தை வகைகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் இடம்பெயர்வதில்லை. ஆனால், நல்ல உணவைத் தேடி தனியாக அலைபவை.
 

13 / 14

ஆந்தைகள் ஒரே நேரத்தில் பன்னிரெண்டு முட்டைகள் வரை இடும். மரத்தில் உள்ள பொந்துகளில் வசிக்கும். நிலத்தில் உள்ள வளைகள் குகைகளிலும் ஆந்தைகள் வசிக்கும்.

14 / 14

ஜோடியைக் கண்டுபிடிக்கவும், இருட்டில் தனது இடத்தைச் சொல்லவும் ஆந்தைகள் குரல் எழுப்பும்.| தொகுப்பு: ஷங்கர்
 

Recently Added

More From This Category

x