Published on : 29 Nov 2024 18:43 pm

அணில்: புல்லுக்குள் வீடு

Published on : 29 Nov 2024 18:43 pm

1 / 12

அணில் பாலூட்டி வகையைச் சேர்ந்தது. கொறித்து உண்ணும் பழக்கமுடையது.
 

2 / 12

முதுகில் இருக்கும் மூன்று கோடுகள்தான் தென்னிந்திய அணிலின் அடையாளம்.
 

3 / 12

‘இந்திய அணில்கள்’ என்றழைக்கப்படும் அணில்கள், இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணப்படுகின்றன.

4 / 12

அணிலின் வாலில் புதர் போல ரோமம் அடர்த்தியாக இருக்கும். வால் அதன் உடலை விடச் சற்று நீளம் குறைவானது.  
 

5 / 12

அணில் குஞ்சுகள் வெளுத்தும் பழுப்பாகவும் காணப்படும். வளரும்போது அதன் நிறம் அடர்த்தியாக மாறும்.

6 / 12

பழங்கள், கொட்டைகள், மலர்கள், முளைகள், பூச்சிகள் ஆகியவற்றைச் சாப்பிடும். சில வேளைகளில் பறவைக் குஞ்சுகளையும் சாப்பிடும்.
 

7 / 12

ஒரு பெரிய அணிலின் எடை சராசரியாக 100 கிராம் மட்டுமே இருக்கும்.

8 / 12

பெண் அணிலின் கர்ப்பக் காலம் 34 நாட்கள்தான். இலையுதிர் காலத்தில் புல் மூலம் கூடுகளை அமைத்து பெண் அணில் குட்டி போடும்.
 

9 / 12

ஒரே சமயத்தில் இரண்டு முதல் மூன்று குட்டிகளை அணில் போடும்.

10 / 12

அணில்கள் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் பழக்கமுடையவை. நகரங்களில் மனிதர்கள் சாப்பிடும் உணவு வகைகளைச் சாப்பிட சீக்கிரமே பழகிவிடும்.
 

11 / 12

அணில்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகக் காணப்படும். உணவு ஆதாரங்களை மற்ற உயிர்கள் மற்றும் சகாக்களிடம் இருந்து பாதுகாப்பதில் மிகவும் சாமர்த்தியமாகச் செயல்படும்.
 

12 / 12

அணில்கள் சராசரியாக நான்கு முதல் ஐந்து ஆண்டுகள்வரை உயிர் வாழும். | தொகுப்பு: ஷங்கர்

Recently Added

More From This Category

x