பூமி சுற்றுவதை நிறுத்தினால் என்ன ஆகும்?
Published on : 14 Nov 2024 18:58 pm
1 / 7
பூமி சுழல்வதை நிறுத்திக்கொண்டால் என்ன ஆகும் என்பதை முழுமையாகச் சொல்ல இயலவில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
2 / 7
பூமி சுழல்வதாலேயே இரவு, பகல் ஏற்படுகிறது. இது பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கிறது.
3 / 7
பூமி சுழலாமல் ஒரே இடத்தில் நின்றால், பூமியின் ஒரு பகுதி சூரிய ஒளியைப் பெறும். மற்றொரு பகுதிக்குச் சூரிய ஒளி கிடைக்காது.
4 / 7
இரவே இல்லாமல் பகலாக இருந்தால் வெப்பத்தை உயிரினங்களால் தாங்க இயலாது.
5 / 7
உயிரினங்களின் உயிர்க்கடிகாரம் தன் இயல்பை இழக்கும். துருவப் பகுதி உருகிவிடும். இன்னொரு பக்கம் எப்போதும் இருளாகவே இருக்கும்.
6 / 7
உயிரினங்களால் குளிரைத் தாங்க இயலாது. சூரியன் இன்றி தாவரங்களால் உணவு தயாரிக்க இயலாது.
7 / 7
கடல் நீர் உறைந்து பருவ காலங்கள் ஏற்படாது. பூமி உயிரினங்கள் வாழத் தகுதியற்ற கோளாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.