Published on : 11 Nov 2024 18:42 pm

சிப்பி எப்படி முத்துகளை உருவாக்குகிறது?

Published on : 11 Nov 2024 18:42 pm

1 / 18

இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று முத்து. மதிப்புமிக்கப் பொருள்களில் ஒன்றாக இருக்கிறது. அதைக் கடலில் வாழும் உயிரினமான சிப்பிதான் உருவாக்குகிறது.

2 / 18

சிப்பியின் ஓடு எந்தப் பொருளால் உருவாக்கப்பட்டிருக்கிறதோ அதே பொருளால்தான் முத்தும் உருவாக்கப்படுகிறது.

3 / 18

முத்து மட்டுமல்ல மெல்லுடலி (Molluscs) உயிரினங்களான நத்தை, கிளிஞ்சல் போன்றவற்றின் ஓடுகளும் அதே பொருளால்தான் உருவாக்கப்பட்டுள்ளன. 
 

4 / 18

அந்த வேதிப்பொருள், நாம் அன்றாட வாழ்வில் பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தும் கால்சியம் கார்பனேட்.

5 / 18

மெல்லுடலிகள் உருவாக்கும் அரகோனைட்டின் ஒருவகைதான் நேகர் (Nacre). இதுதான் விலை உயர்ந்த முத்துகளை உருவாக்கும் மந்திரப் பொருள்.
 

6 / 18

மெல்லுடலிகள் அரகோனைட்டை ஒரு குறிப்பிட்ட அடுக்குகளில் பொருத்தி, அதில் புரதங்களைச் செலுத்தி நேக்கர் எனும் கனிமக் கலவையை உருவாக்குகின்றன. 
 

7 / 18

நேக்கரின் சீரான கட்டமைப்புதான் அதன் ஒளிர்வுத் தன்மைக்கும் பளபளப்புக்கும் காரணமாகிறது.
 

8 / 18

ஒளியின் துகள்கள் கெட்டியடைந்த நேக்கரில் மோதும்போது அதன் பல அடுக்குப் படிக அமைப்பில் மோதிச் சிதறுகின்றன. அதனால்தான் முத்து பல வண்ணங்களாக ஒளிர்கிறது.
 

9 / 18

நேக்கர் அழகான பொருள் மட்டுமல்ல. மெலிதானதும் அதேநேரம் வலிமையானதும்கூட. 
 

10 / 18

சிப்பிகள் மட்டுமல்ல, பல மெல்லுடலிகள் நேக்கரைச் சுரக்கின்றன. ஆனால், சிப்பிகள் மட்டும்தான் முத்துகளை உருவாக்குகின்றன.
 

11 / 18

ஏன் சிப்பி மட்டும் முத்துகளை உருவாக்க வேண்டும்? உண்மையில் சிப்பி தன்னை வெளிப் பொருள்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளத்தான் நேக்கரை உற்பத்தி செய்கிறது.
 

12 / 18

சிப்பிகளுக்குள் ஒட்டுண்ணியோ அல்லது இடையூறு ஏற்படுத்தும் வெளிப்பொருள்களோ உள்ளே நுழையும்போது உறுத்தலை ஏற்படுத்துகின்றன.
 

13 / 18

அவற்றை எதிர்கொள்ள மேன்டில், கோன்சியோலின் எனும் புரதத்தைச் சுரந்து அவற்றைப் பிடித்துவைத்துக்கொள்ளும். பிறகு அடர்த்தியான நேக்கர் சுரக்க ஆரம்பிக்கும்.

14 / 18

இந்த நேக்கர் பல அடுக்குகளாகச் சுரந்து சிறிது சிறிதாகக் கெட்டியடையும்போது முத்து உருவாகுகிறது.

15 / 18

உண்மையில் முத்து கோள வடிவில் இருப்பது என்பது அபூர்வம்தான். நேகர் இந்த வடிவத்தில்தான் கெட்டியடையும் என்று சொல்ல முடியாது.
 

16 / 18

மனிதர்கள் கோள வடிவத்தில் உள்ள முத்தையே எடுத்துப் பயன்படுத்துகின்றனர். இதனால்தான் அது அபூர்வமானதாகவும் தோன்றுகிறது.

17 / 18

இப்படியாகத் தம்மை பாதிக்க வரும் வெளிப்பொருள்களைப் பிடித்து வைத்துதான் சிப்பிகள் முத்துகளைத் தயாரிக்கின்றன.

18 / 18

மழை வரும்போது சிப்பி தன் வாயைத் திறந்து, ஒரு துளி மழை நீரை விழுங்கும். அதுதான் முத்தாக உருமாறும் என்ற கதையை இனி நம்ப மாட்டீர்கள்தானே? | தகவல்கள்: நன்மாறன் திருநாவுக்கரசு

Recently Added

More From This Category

x