பாத வெடிப்பு: காரணமும் தீர்வும்
Published on : 09 Nov 2024 18:01 pm
1 / 9
பாத வெடிப்பு, பித்த வெடிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது பாதங்களின் தோலில் ஏற்படும் வறட்சியான நிலையைக் குறிக்கிறது. இது வலி ஏற்படுத்தலாம்.
2 / 9
கோடைக்காலம், குளிர்காலம், குறைந்த ஈரப்பதம், நீர்ச்சத்து குறைவாக இருப்பது போன்ற காரணிகளும் தோல் வறட்சிக்கு வழிவகுக்கும்.
3 / 9
அதிக உடல் எடை காரணமாகப் பாதங்களில் அழுத்தம் அதிகரித்து, தோலில் வெடிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
4 / 9
நீண்ட நேரம் நின்று வேலை செய்பவராக இருந்தாலும் பாத வெடிப்புக்கு ஆளாகக்கூடும்.
5 / 9
சர்க்கரை நோய், ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவது, ஒவ்வாமை போன்ற சில மருத்துவ நிலைமைகள் பாத வெடிப்புக்கு வழி வகுக்கும்.
6 / 9
சரியான செருப்பு அணியாமல் இருப்பதும் பாதவெடிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.
7 / 9
பாதவெடிப்புகளில் தினமும் இரண்டு வேளைக்கு ஈரப்பதமேற்பிகளைப் (Moisturizer) பூசினால் பலன் கிடைக்கும்.
8 / 9
தினமும் 10-15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊற வைப்பது தோலை மென்மையாக்க உதவும்.
9 / 9
எந்தக் காரணத்தால் பாதவெடிப்பு ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுப்பது அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். | கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன்