ஆக்சிஜன் - சில தகவல்கள்
Published on : 08 Nov 2024 19:02 pm
1 / 12
நாம் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத வாயு ஆக்சிஜன். ஆனால், அதே ஆக்சிஜன்தான் நமது உடலை அழிக்கும் மிக ஆபத்தான வாயு என்கின்றனர் விஞ்ஞானிகள்.
2 / 12
சுத்தமான ஆக்சிஜன் நச்சு வாய்ந்தது. நமது நுரையீரல், நரம்பு மண்டலம் இரண்டுக்கும் சேதம் விளைவித்து, உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடியது.
3 / 12
ஆக்சிஜனால் நமது உடல் பாதிக்கக்கூடிய நிலையை ஹைபர்ஆக்சியா (Hyperoxia) என்கிறோம். ஆனால், ஆக்சிஜன் ஏன் ஆபத்தாகிறது?
4 / 12
உண்மையில் நாம் சுவாசிப்பது ஆக்சிஜனை மட்டுமல்ல. நாம் சுவாசிக்கும் காற்றில் ஆக்சிஜனோடு 78% நைட்ரஜன், 0.04% கார்பன்-டை-ஆக்சைடு கலவையைத்தான் நாம் சுவாசிக்கிறோம்.
5 / 12
ஆக்சிஜன் உடலின் ரத்தச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினால் ஈர்க்கப்பட்டு, ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுகிறது. பிறகு ஹீமோகுளோபின் மூலம் அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச்செல்கிறது.
6 / 12
ஆக்சிஜன் நாம் சாப்பிடும் உணவில் உள்ள குளுக்கோஸுடன் இணைந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தயாரிக்கிறது. இந்தச் செயல்பாட்டைத்தான் நாம் செல் சுவாசம் என்கிறோம்.
7 / 12
இந்த செல் சுவாசம் நடைபெறும்போது வேறு சில மூலக்கூறுகளும் உற்பத்தியாகின்றன. இந்த மூலக்கூறுகள் அதிக வினைத்திறன் உடையவை. இவற்றை ஒற்றை அயனி என்கிறோம்.
8 / 12
இந்தத் ஒற்றை அயனி நிலையில்லாதவை. இதனால், அவை நிலைபெறுவதற்காக வினைபுரிவதைத்தான் ஆக்சிஜனேற்றம் என்கிறோம். இந்தச் செயல்பாடுதான் உடலுக்குக் கேடானது.
9 / 12
ஒருவேளை நாம் சுத்தமான ஆக்சிஜனை மட்டும் சுவாசித்தால், முதலில் நுரையீரலில் உள்ள செல்கள் இறக்கத் தொடங்கும். இறுதியாக நமது உயிருக்கே ஆபத்தாக முடியும்.
10 / 12
காற்றில் கலந்துள்ள ஆக்சிஜனைச் சுவாசிக்கும்போது இது நடப்பதில்லை. அத்துடன் காற்றில் உள்ள நைட்ரஜனும் நமது நுரையீரலைப் பாதுகாக்கிறது.
11 / 12
சுவாசிக்கும் காற்றில் சுத்தமான ஆக்சிஜன் மட்டும் இருந்தால் நுரையீரல் காற்றின் அழுத்தத்தை மாற்றி, உறுப்பையே சிதைத்துவிடும். நாம் சுத்தமான ஆக்சிஜனைச் சுவாசிப்பதில்லை.
12 / 12
மருத்துவமனையில் தூய ஆக்சிஜனைப் பயன்படுத்துகிறோம். அந்த ஆக்சிஜன் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே தரப்படுவதால் எந்தப் பாதிப்புமில்லை. | தகவல்கள்: நன்மாறன் திருநாவுக்கரசு