காது குடைய பட்ஸ் ஆபத்தா?
Published on : 07 Oct 2024 16:15 pm
1 / 11
காது குரும்பியில் தண்ணீர் பட்டால் உப்பிவிடும். இதனால் காது சரியாகக் கேட்காது. குரும்பியை `பட்ஸ்’ கொண்டு அகற்றாமல் மருத்துவர் அகற்றுவதுதான் சரி.
2 / 11
காது குடையும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. காரணம், காது குடைவதில் கிடைக்கும் சுகம். ஆனால், இது ஆபத்தானது.
3 / 11
பட்ஸை வைத்துக் காதை குடைவதால், காதில் தொற்று ஏற்படவே வழிவகுக்கும். இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனைக் காது இழந்துவிடும்.
4 / 11
தவறுதலாகச் செவிப்பறையில் `பட்ஸ்’ பட்டு கிழித்துவிட்டால், காது கேட்காமல் போகும் ஆபத்துள்ளது. அதனால் பட்ஸால் காது குடைவதைத் தவிர்ப்பீர்.
5 / 11
காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்கவேண்டும். இதற்கு இயற்கை தந்துள்ள பாதுகாப்பு வளையம்தான், காதுக் குரும்பி.
6 / 11
காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள் செவிப்பறையைப் பாதிக்காதபடி தடுப்பது, இந்தக் குரும்பிதான். இதை அகற்றவேண்டிய அவசியமில்லை. தானாகவே வந்துவிடும்.
7 / 11
குரும்பியை அகற்ற தேங்காய் எண்ணெயைக் காதில் சில சொட்டுகள் விட்டால் குரும்பி ஊறி, தானாகவே வெளியில் வந்துவிடும்.
8 / 11
நாட்பட்ட குரும்பி எண்ணெய் ஊற்றினால் வராது. சிரிஞ்ச் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அகற்றவேண்டும். இதற்கு மருத்துவர் உதவி தேவை.
9 / 11
காதில் எறும்பு, பூச்சி புகுந்திருந்தால், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய்யின் சொட்டுகள் விட்டால், பூச்சி இறந்து வெளியில் வந்துவிடும்.
10 / 11
எந்தக் காரணத்தைக் கொண்டும் காய்ச்சிய எண்ணெயைக் காதுக்குள் ஊற்றக் கூடாது. அப்படிச் செய்தால், காது கடுமையாகப் பாதிக்கப்படும்.
11 / 11
காதில் சீழ் வடிந்தால் ஆரம்ப நிலையிலேயே மருத்துவ சிகிச்சை பெற்றுவிட வேண்டும். காலம்கடத்தினால், அறுவை சிகிச்சை தான். எச்சரிக்கை. | கைடன்ஸ்: கு.கணேசன்