பின்னோக்கி நடைப் பயிற்சி செய்யலாமா?
Published on : 03 Oct 2024 17:12 pm
1 / 9
நடைப்பயிற்சி செய்வோரிடம் பின்னோக்கி நடை பயில்வது அதிகரித்து வருகிறது. இது சரியா, ஏதேனும் பாதிப்பா என்பதை அறியலாம்.
2 / 9
பின்னோக்கி நடக்கும்போது தொடையில் உடலில் தசைகள் வலுப்பெறுகின்றன.
3 / 9
பின்னோக்கி நடப்பது முழங்காலில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கிறது.
4 / 9
முன்னோக்கி நடப்பதைவிட 40% அதிக கலோரிகள் எரிக்கப்படுகிறது என்றும், உடலின் சமநிலையை அதிகப்படுத்துகிறது என்றும் ஆய்வு தெரிவித்துள்ளது.
5 / 9
பின்னோக்கி நடக்கும்போது ஓர் எச்சரிக்கை உணர்வு தேவைப்படுவதால், மூளையின் கவனம், ஒருங்கிணைப்பு உள்ளிட்டவற்றில் செயல்திறன் கூடுகிறது.
6 / 9
பின்னோக்கிய நடையில் இதயத்தின் செயல்பாடும் நுரையீரலின் திறனும் அதிகரிக்கின்றன.
7 / 9
பின்னோக்கி நடை பயில்வோர் தடுமாறி கீழே விழச் சாத்தியமுண்டு. அதைத் தவிர்க்க, நன்கு பழகிய இடங்களில் பயிற்சி செய்ய வேண்டும்.
8 / 9
பின்னோக்கிய நடையை மெதுவாக ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாகவே வேகத்தைக் கூட்ட வேண்டும்
9 / 9
சரியான காலணிகளை அணிந்துகொள்ள வேண்டும். | கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன்.