Published on : 17 Sep 2024 19:00 pm

‘சமூகப் பதற்ற பாதிப்பு’ வருவது ஏன்?

Published on : 17 Sep 2024 19:00 pm

1 / 9

நல்ல உடை போன்றவை வாங்கக் கூட நமக்குப் பிடித்தபடி வாங்காமல் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைக் குறித்தே பெரிதும் கவலைப்படுகிறோம்.

2 / 9

குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றில்கூட அவர்களது திறமை, விருப்பத்தைவிடச் சமூக அங்கீகரிப்பே முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
 

3 / 9

சமூக அங்கீகரிப்பின் விளைவு நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும், மற்றவர்களுக்காகப் பல செயல்களைச் செய்யத் தொடங்குகிறோம்.
 

4 / 9

நமது செயல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் சமூகம் எல்லாவிதமாகவும் பேசும். அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்பது எந்த ஆக்கப்பூர்வ விளைவையும் தராது.
 

5 / 9

பிறர் நம் மீது கொண்டுள்ள மதிப்பு குறித்து அளவுக்கு அதிகமாகக் கவலைப்படுவது நம்மைக் குறைவாக மதிப்பிட்டுத் தாழ்வு மனப்பான்மைக்கு வழிவகுக்கிறது. 

6 / 9

தாழ்வு மனப்பான்மையால் பிறர் முன் பதற்றம் ஏற்படுகிறது. சாதாரணப் போட்டிகளில் கோலி மாதிரி விளையாடிவிட்டு, முக்கியப் போட்டிகளில் கோழி ஆகிறோம்.
 

7 / 9

பொது இடங்களுக்குச் செல்ல அஞ்சுவது, பொதுக் கூட்டங்களில் பேச அஞ்சுவது, இதயம் படபடப்பது ‘சமூகப் பதற்ற பாதிப்பு’ என அழைக்கப்படுகிறது.
 

8 / 9

நம்மைப் பற்றித் தாழ்வாக நினைக்காமல் இருப்பது, பிறர் கருத்துக்களுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது இரண்டும்தான் இதற்கான தீர்வுகள்.

9 / 9

சமூகத்துடன் இணைவது அவசியம்தான். அதற்காக அளவுக்கு அதிகமாகச் சமூகத்தை நினைப்பது பாதகம் தரும். சமநிலையே நலம் தரும். | தகவல்: டாக்டர் ஜி.ராமானுஜன்

Recently Added

More From This Category

x