நிறம் மாறும் பற்கள் - தடுப்பு வழிகள் யாவை?
Published on : 06 Sep 2024 16:51 pm
1 / 11
‘டூத் ஒயிட்டனிங்’ சிகிச்சைக்குப் பதிலாக ஆண்டுக்கு ஒருமுறை ‘ஸ்கேலிங்’ என்ற முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
2 / 11
‘ஸ்கேலிங்’ மூலம் பல்லில் காரை படிதல், நிறமிழத்தல் போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படும். இதற்கு ஒவ்வாமை ஏற்பட வழியில்லை. பற்கள் எளிதாக இயல்பு நிறத்துக்கு மாறும்.
3 / 11
டென்டல் ஃபுளூரோசிஸ் பிரச்சினை உள்ளவர்கள் பல் மருத்துவர் ஆலோசனைப்படி ஃபுளூரைடு பற்பசைகளைப் பயன்படுத்த வேண்டும்.
4 / 11
புகைப் பழக்கம், புகையிலை போடுதல், குளிர்பானங்கள், கோலா பானங்கள் குடித்தல் ஆகியவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். மது வேண்டவே வேண்டாம்.
5 / 11
சாக்லேட், இனிப்பு மாவு மற்றும் சர்க்கரை கலந்த இனிப்புகளைச் சாப்பிட்ட பிறகு வாயை நன்றாகக் கொப்பளியுங்கள். அல்லது காரட், ஏதாவது ஒரு பழம் சாப்பிடுங்கள்.
6 / 11
‘பளிச்’ பற்களுக்கான விளம்பரங்களைப் பார்த்து தினமும் புதிது புதிதாக பற்பசைகளை வாங்கிப் பயன்படுத்தாதீர். பல பற்பசைகளில் ‘பிளீச்சிங்’ ரசாயனங்களே உள்ளன.
7 / 11
‘பிளீச்சிங்’ ரசாயனங்களால் சில நாட்களில் பற்கள் வெண்மையானதுபோல் தோன்றலாம். ஆனால், நாளடைவில் எனாமல் கரைந்து பற்கள் சேதமடையவே வாய்ப்பு அதிகம்.
8 / 11
தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். மிருதுவான பல் துலக்கியில் பட்டாணி அளவுக்குப் பற்பசை கொண்டு ஐந்து நிமிடங்களுக்குப் பல் துலக்கினால் போதும்.
9 / 11
அதிக நேரம் துலக்குவதாலோ, அழுத்தமாகத் துலக்குவதாலோ அதிக பற்பசை கொண்டு துலக்குவதாலோ பற்கள் வெள்ளை நிறத்துக்கு மாறிவிடாது.
10 / 11
ஜெல் பற்பசை மற்றும் பல்வேறு நிறங்களில் உள்ள பற்பசைகளைப் பயன்படுத்த வேண்டாம். வெள்ளை நிறத்தில் இருக்கும் பற்பசையை மட்டுமே பயன்படுத்துங்கள்.
11 / 11
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நீங்களாகவே மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடாதீர்கள். | தகவல்கள்: பொதுநல மருத்துவர் கு.கணேசன்