விலங்குகளின் விநோத தூக்கம்! - குதிரை முதல் கரடி வரை
Published on : 05 Sep 2024 19:00 pm
1 / 12
ஒரு விலங்கு கிடைக்கும் இடைவெளி நேரங்களில் குட்டித் தூக்கமோ, பாதி விழிப்பு; மீதி ஓய்வு என அரைத் தூக்கத்தையோ விலங்குகள் போடும்.
2 / 12
குதிரைகள், வரிக் குதிரைகள் நின்றபடியே தூங்கும் இயல்புடையவை. மூட்டுகளை இறுக்கிக்கொண்டு உடலின் மொத்த எடையைக் கால்களில் சுமக்கும் இயல்பு இவற்றுக்கு உண்டு.
3 / 12
குண்டு உடல் காரணமாகப் பெரும்பாலும் யானை படுத்து தூங்காது. வலுவான மரத்தின் மீது தலை, தும்பிக்கையைச் சாய்த்து குட்டித் தூக்கம் போடுவதையே விரும்பும்.
4 / 12
பாம்புகளுக்குக் கண்ணில் இமைகள் இல்லை. அசையாது சுருண்டு அவை குட்டித் தூக்கம் போடும். உறக்கத்தின்போது கண்களிலுள்ள ரெட்டினா பகுதியை சிறிய சவ்வு மூடிக்கொள்ளும்.
5 / 12
காண்டாமிருகம் மனிதர்களைப் போலவே தினசரி 8 மணி நேரம் தூங்கும். ஆழ்ந்த உறக்கத்தில்கூட, சிறு சத்தத்தையும் உணர்ந்து உஷாராகும் இயல்புடையது.
6 / 12
மிகவும் வேகமாக ஓடக்கூடிய சிறுத்தை, மரத்தின் உயரமான கிளையிலும் உடலை சாய்த்துத் தூங்கும். அப்படித் தூங்கும்போதும் கிளையிலிருந்து சிறுத்தையின் உடல் சரியாது.
7 / 12
கரடி தினமும் குறைந்தது 15 மணி நேரம் தூக்கத்தில் இருக்கும். விழித்திருக்கும் மிச்ச நேரத்திலும் தூங்குவது போலவே தோற்றமளிக்கும்.
8 / 12
பறவைகள் நீண்ட தூரம் பறக்கும்போதும் அவை அரைத் தூக்க நிலையிலேயே ஓய்வெடுக்கின்றன. ஆனால் கீழே விழாமல் பறந்துகொண்டே இருக்கும்.
9 / 12
வாத்து கூட்டத்தில் ஓரத்தில் இருப்பவை, குழுவின் பாதுகாப்புக்காக அரைத்தூக்கம் போடும். நடுவில் இருப்பவை பாதுகாப்பாக முழுத் தூக்கம் போடும்.
10 / 12
வௌவால்கள் சுமார் 20 மணி நேரம் தூங்கும். நள்ளிரவில் மட்டுமே இரைதேடிச் செல்வதால், மற்ற சமயங்களில் தலைகீழாகத் தொங்கியபடி தூங்கிக்கொண்டிருக்கும்.
11 / 12
உயரமான விலங்கான ஒட்டகச்சிவிங்கி அவ்வப்போது 5 அல்லது 10 நிமிடங்களாக தினமும் அதிகபட்சமாக 1 அல்லது 2 மணி நேரம் மட்டுமே தூங்கும்.
12 / 12
விலங்குகளில் கரடியின் குளிர்காலத் தூக்கம் ரொம்ப பிரபலமானது. உணவின்றி சுமார் 8 மாதங்கள் வரை கரடி கும்பகர்ணத் தூக்கம் போடுவதுண்டு. | தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்