Published on : 19 Jul 2024 16:17 pm

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள் என்னென்ன?

Published on : 19 Jul 2024 16:17 pm

1 / 11
நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு பழத்தின் ஜி.ஐ (GI - Glycemic Index) குறியீட்டு எண்ணை அறிந்துகொண்ட பின், உண்ண வேண்டும். ஜி.ஐ. என்பது கிளைசிமிக் குறியீடு.
2 / 11
நீரிழிவு நோய் உள்ளவர்கள் 55 அல்லது அதற்கும் குறைந்த அளவுள்ள ஜி.ஐ. குறியீட்டைக் கொண்ட பழங்களை உண்ணலாம். உதாரணம் ஆப்பிள், பேரிக்காய்.
3 / 11
சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள் இங்கே...
4 / 11
மாம்பழம்: மிகுந்த சர்க்கரை இருப்பதால் பழங்களின் ராஜா எனப்படும் மாம்பழத்தைத் தவிர்க்க வேண்டும். உட்கொண்டால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
5 / 11
சப்போட்டா: இந்தப் பழத்தின் ஜி.ஐ. குறியீட்டு எண் 55க்கு மேலே உள்ளதால், இதைத் தவிர்க்க வேண்டும். இப்பழத்தில் சர்க்கரையும் கார்போஹைட்ரேட்டும் அதிகம்.
6 / 11
திராட்சை: நார்ச்சத்து, வைட்டமின் எனப் பல ஊட்டச்சத்துகள் நிறைந்த திராட்சையில் அதிக அளவு சர்க்கரையும் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது. 100 கிராம் திராட்சையில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
7 / 11
வாழைப்பழம்: அரை கப் வாழைப்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இதன் ஜி.ஐ. 46 முதல் 70 வரை. பழுத்த வாழைப்பழங்களைச் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
8 / 11
தர்பூசணி: குறைந்த நார்ச்சத்து, குறைந்த கலோரி உடைய தர்பூசணி பழத்தில் ஜி.ஐ குறியீடு 72. வைட்டமின் ஏ, சியும் அதிகமாக உள்ளன. அரை கப் தர்பூசணியில் 5 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
9 / 11
அன்னாசி: அதிகக் கிளைசிமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், இப்பழத்தைத் தவிர்க்க வேண்டும். ஒரு சிறிய கோப்பை அன்னாசிப் பழத்தில் 20 கிராமுக்கு மேற்பட்ட அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.
10 / 11
சீத்தாப்பழம்: வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, நார்ச்சத்து நிரம்பிய இப்பழத்தில் சர்க்கரை அதிகம். 100 கிராம் சீத்தாப்பழத்தில் 23 கிராமைவிட அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது.
11 / 11
முந்திரிப்பழம்: நீரிழிவு நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும். 103 ஜி.ஐ. மதிப்பு கொண்ட இப்பழத்தின் கால் பங்கிலேயே 24 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

Recently Added

More From This Category

x