Published on : 19 Apr 2023 15:06 pm

கொடைக்கானலில் பூத்த பிரம்ம கமலம் - போட்டோ ஸ்டோரி

Published on : 19 Apr 2023 15:06 pm

1 / 5
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் சிவப்பு, இளஞ்சிவப்பு வண்ணத்தில் பூத்துள்ள ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலர் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது
2 / 5
கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பிரையன்ட் பூங்கா உள்ளது. இங்கு பல்வேறு கால நிலைகளில் பூக்கும் பூச்செடிகள் ஏராளமாக உள்ளன. இங்குள்ள கண்ணாடி மாளிகையில் அரிய வகை கற்றாழை, தாவரங்கள் மற்றும் பிரம்ம கமலம் செடியும் வளர்த்து வருகின்றனர்
3 / 5
பிரம்ம கமலம் பூவின் சிறப்பு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். அதுவும் நள்ளிரவில் மட்டுமே பூக்கும். தற்போது பிரையன்ட் பூங்காவில் திங்கள்கிழமை நள்ளிரவில் வெவ்வேறு செடிகளில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் பிரம்ம கமலம் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன
4 / 5
இதே போல், மே மாதம் நடக்கவுள்ள 60-வது மலர் கண்காட்சிக்காக நடவு செய்யப்பட்டுள்ள ‘ஸ்பைடர் லில்லி’ பூச்செடிகள் வெள்ளை வண்ணத்தில் பூத்துக் குலுங்குகின்றன. இந்த பூக்களை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்
5 / 5
இது குறித்து தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் கூறுகையில், “பிரையன்ட் பூங்காவில் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் பூக்கும் மூன்று வகையான பிரம்ம கமலம் செடிகள் மொத்தம் 40 உள்ளன. அவை தற்போது ஒவ்வொன்றாக பூக்கத் தொடங்கியுள்ளது. ரோஸ் கார்டனில் 10 பிரம்மகமலம் செடிகளை வளர்த்து வருகிறோம். ஆண்டுக்கு ஒரு முறை ஒரு செடியில் அதிகபட்சம் இரண்டு பூக்கள் மட்டுமே பூக்கும்” என்றார். | தகவல்: ஆ.நல்லசிவன்

Recently Added

More From This Category

x