அலறவிட்ட காளைகளும் காளையர்களும்... அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அசத்தல் க்ளிக்ஸ் by எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Published on : 14 Jan 2025 18:08 pm
1 / 19
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 19
இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று (ஜன. 14) காலை 6.30 மணிக்கு தொடங்கியது.
3 / 19
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர்.
4 / 19
இந்த வீர விளையாட்டுப் போட்டியை காண மதுரை மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
5 / 19
காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள் ஆரஞ்சு, நீலம் உள்ளிட்ட வண்ணங்களில் உடையணிந்து ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் என்ற கணக்கில் களமாடினர்.
6 / 19
ஜல்லிக்கட்டில் வாடி வாசலில் இருந்து திமிலோடும், திமிரோடும் சீறிப் பாய்ந்து வரும் காளைகளை அடக்குவதற்கு மல்லுக்கட்டிய சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு வழங்கப்படுகிறது.
7 / 19
மாடுபிடி வீரர்களை துவம்சம் செய்து யாருக்கும் அடங்காத காளையாக அடக்கமுடியாத காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசு வழங்கப்படுகிறது.
8 / 19
மாடுபிடி வீரர்களுக்கு தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், வயர் கட்டில், அண்டாக்கள், சைக்கிள்கள், மிக்சி, பேன், கிரைண்டர், குக்கர் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
9 / 19
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 2,026 காளைகளும் 1,735 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
10 / 19
வர்ணனையாளர் செங்குட்டுவன் வாடிவாசலில் இருந்து சீறும் காளைகளையும், அடக்கும் காளையர்களுக்கும் உற்சாகமூட்டும் வகையில் வார்த்தை ஜாலங்களுடன் வர்ணனை செய்வது அனைவரையும் கவர்ந்தது.
11 / 19
பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 1500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
12 / 19
13 / 19
14 / 19
15 / 19
16 / 19
17 / 19
18 / 19
19 / 19