Published on : 26 Sep 2024 12:53 pm

ஜப்பானை முந்திய இந்தியா - ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள்

Published on : 26 Sep 2024 12:53 pm

1 / 9

ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி இன்ஸ்டிடியூட். 
 

2 / 9

நாடுகளின் பொருளாதாரம், ராணுவத் திறன், வெளிநாட்டு உறவு, கலாச்சாரம், எதிர்கால வளர்ச்சி அடிப்படையில் ஆனது இந்தப் பட்டியல். 

3 / 9

இந்தப் பட்டியலில், முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளன. 

4 / 9

மூன்றாம் இடத்தில் ஜப்பான் இருந்த நிலையில், தற்போது ஐப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 3-வது இடம் பிடித்துள்ளது. 

5 / 9

இந்தப் பட்டியலில் 4-வது இடத்தில் ஜப்பான், 5-வது ஆஸ்திரேலியா, 6-வது இடத்தில் ரஷ்யா, 7-வது இடத்தில் தென் கொரியா உள்ளன.

6 / 9

8-வது இடத்தில் சிங்கப்பூர், 9-வது இடத்தில் இந்தோனேசியா, 10-வது இடத்தில் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. 

7 / 9

கரோனாவுக்குப் பிறகு வேகமாக மீண்டெழுந்தது இந்தியாவின் வலுவான வளர்ச்சியைக் காட்டுவதாக லோவி இன்ஸ்டிடியூட் அறிக்கை கூறுகிறது.

8 / 9

இந்தியாவில் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வளர்ச்சிக்கு இது முக்கிய காரணியாக கூறப்பட்டுள்ளது.

9 / 9

அதேசமயம், பொருளாதார ரீதியான தீவிர ஏற்றத்தாழ்வு, அடிப்படை வசதிகளின் தேவை இந்தியாவின் சவாலாக நீடிக்கிறதாம்!

Recently Added

More From This Category

x