கடலை பாதுகாக்க சில வழிகள்!
Published on : 21 Sep 2024 17:30 pm
1 / 9
கடலில் சேரும் குப்பைகள் உலகளவில் பெரிய சவாலான பிரச்சனை. வரும் தலைமுறையினருக்காக கடலை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
2 / 9
கடற்கரை பகுதிகளில் கைவிடப்பட்ட, வீணடிக்கப்பட்ட தூக்கிவீசப்பட்ட, ஓதுங்கிய பொருட்கள் குப்பைகளாக மாறுகின்றன. 99% கடல் குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்களாகும்.
3 / 9
ஆண்டுதோறும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் நுழைகின்றன. பெருங்கடல்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், மனித நல்வாழ்வை அச்சுறுத்துகிறது.
4 / 9
கடலோரப் பகுதிகளில் 3 விதங்களில் குப்பைகள் சேருகின்றன. நிலம் சார்ந்த ஆதாரங்கள், கடல் சார்ந்த ஆதாரங்கள், இயற்கை காரணிகள்.
5 / 9
கடல் குப்பைகள் மனித நல்வாழ்வுக்கான தீங்குகளை விளைவிப்பதுடன் கடல் சார்ந்த பல்லுயிர்களுக்கு எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.
6 / 9
கடல் குப்பைகளை திறம்பட சமாளிக்க வேண்டுமானால், தொடர்ச்சியான சமூக ஈடுபாடு, மிக முக்கியமாக, தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி தேவை.
7 / 9
கடல் குப்பைகளை எதிர்த்துபபோராடுவதிலும் பெருங்கடல்களைப் பாதுகாப்பதிலும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
8 / 9
ஒவ்வொரு நாளும் கடலோர சுத்தப்படுத்தும் நாளாக மாறும் வகையில் ஒரு முழுமையான அணுகுமுறையை உருவாக்கினால் தான் கடலை காப்பாற்ற முடியும்.
9 / 9
செப்டம்பர் 21 : சர்வதேச கடல் தூய்மை தினம். | தொகுப்பு: சி .வேல்விழி