Published on : 05 Apr 2025 18:44 pm
தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தமிழில் மாளவிகா மோகனன் நடித்து கடைசியாக வெளிவந்த பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படத்தில் அவரது கதாபாத்திரமும், நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது கார்த்தியுடன் இணைந்து ‘சர்தார் 2’ படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘தி ராஜா சாப்’ படத்தின் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்கில் நடிகையாக அறிமுகமாகிறார். அவ்வப்போது வனம் சார்ந்த பகுதிகளுக்கு விசிட் அடிப்பது, இன்ஸ்டாவில் தன் ரசிகர்களுக்காக அப்டேட் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் மாளவிகா மோகனன்.