Published on : 05 Apr 2025 18:21 pm
சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடித்து நெஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகியுள்ள ‘டெஸ்ட்’ (Test) படம் குறித்த பார்வை இது...
கிரிக்கெட் ஜாம்பவான் சித்தார்த் ‘முடிவு’, விஞ்ஞானி மாதவனின் பணப் பிரச்சினை, குழந்தைக்கு ஏங்கும் அவரது மனைவி நயன்தாராவை உள்ளடக்கிய ஒன்லைன் சிறப்பு.
‘டெஸ்ட்’ என்பது மையம் தான் என்றாலும், கிரிக்கெட்டை தாண்டி அரசியல், சூதாட்டம், குடும்ப உளவியல் என பல விஷயங்களை திரைக்கதையில் பேசுவது சிறப்பு.
படத்தின் தொடக்கத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களின் பின்புலங்களை காட்டிய விதமும், அதன் மூலம் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பைத் தூண்டிய விதமும் அருமை.
மாதவன், நயன்தரா, சித்தார்த் கதாபாத்திரங்களை அவரவர் நியாயங்களுக்கு ஏற்ப உளவியல் ரீதியில் ரசிகர்களை அணுக வைத்திருப்பது நேர்த்தியான உத்தி.
மாதவன் - நயன் இடையிலான உறவின் ஆழத்தையும், கணவன் - மனைவி பிரச்சினைகளையும் கச்சிதமாக காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது அட்டகாசம்.
மாதவன், நயன்தரா, சித்தார் ஆகியோரின் கச்சிதமான நடிப்பும், மீரா ஜாஸ்மின், காளிவெங்கட் மற்றும் குட்டிப் பையனின் உறுதுணை நடிப்பு சூப்பர்.
திரைக்கதையில் சற்றே சொதப்பினாலும், பின்னணி இசை, ஒளிப்பதிவு, டெக்னிக்கல் ஏரியா அனைத்துமே ‘டெஸ்ட்’ படத்துக்கு வலுவூட்டும் ப்ளஸ்கள்.
அட்டகாசமான தொடக்கம், திடீர் திருப்பம் தாண்டி, பிற்பகுதியில் தொய்வு இருப்பினும் எங்கேஜிங்குடன் கூடிய நிறைவு ஏற்படுவதால் ‘டெஸ்ட்’ படத்தை நிச்சயம் பார்க்கலாம்.