Published on : 28 Mar 2025 19:09 pm
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம் ‘எல்2: எம்புரான்’. ‘லூசிஃபர்’ வெற்றிப் படத்தின் 2-ம் பாகமான இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
கேரளாவில் மத வெறுப்பும், கலவரமும் எந்நேரமும் ‘காப்பான்’ மோகன்லால்)அமைதியை நிலைநாட்டினாரா என்ற அரசியல் ஆக்ஷன் ஒன்லைன் ப்ளஸ்.
ஆரம்ப காட்சிகள் இழுவை என்றாலும், ஒரு பாலைவனத்தில் ஹீரோ மோகன்லால் ‘மாஸ்’ என்ட்ரி கொடுப்பது அவரது ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்.
ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமான திரை அனுபவத்தை தரவேண்டும் என்பதற்காக இயக்குநர் பிருத்விராஜின் டீமின் கடுமையான உழைப்பு ப்ளஸ்.
திரைக்கதை சற்று சொதப்பினாலும் சுஜித் வாசுதேவனின் கேமரா, தீபக் தேவின் பின்னணி இசை, அகிலேஷ் தேவின் எடிட்டிங் என அனைத்தும் ப்ளஸ்தான்.
ஸ்டன்ட் சிவாவின் அதகளமான சண்டைக் காட்சிகள், குறிப்பாக காட்டில் நடக்கும் மிகச் சிறப்பான ஆக்ஷன் காட்சி மிகப் பெரிய ப்ளஸ்.
படு ஸ்டைலிஷ் ஆக வலம் வரும் மோகன்லால், படம் முழுக்க தனது ஆளுமையை ஒவ்வொரு காட்சியிலும் நிறுவி இருப்பதும் சிறப்பு.
பிருத்விராஜ் சுகுமாறன், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட அனைவருமே தங்கள் வேலையை திறம்பட செய்துள்ளதும் கவனத்துக்கு உரியது.
குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகளை காட்டிய விதமும், வன்முறைகளை நேர்த்தியாக கையாண்ட விதமும் பிருத்விராஜ் இயக்கத்துக்கு நற்சான்று.
நீளமும், பான் இந்தியா தன்மையும் தடுமாறினாலும் கூட, இயன்றவரை ரசிகர்களுக்கு திருப்தியான திரை அனுபவத்தை தர முயற்சி செய்கிறது ‘எல்2: எம்புரான்’.