Published on : 30 Jan 2025 16:22 pm
‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழிலும் நாயகியாக அறிமுகமாகிறார் கயாடு லோஹர்.
கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நாயகியாக நடித்தவர் கயாடு லோஹர்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டிராகன்’.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய 'ஏன் டி விட்டு போன' என்ற பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.
டிராகன் திரைப்படம், வருகிற பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.