Published on : 29 Jan 2025 15:37 pm
பூஜா ஹெக்டேவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
2012-ல் ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே.
அடுத்து ‘ஒக்க லைலா கோசம்’ தெலுங்கு படத்தில் நடித்தார்.
அவர் 2016-ல் வெளியான ‘மொகஞ்சதாரோ’ இந்தி படத்தில் நடித்தார்.
தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அவருக்கு ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ படத்தின் ‘புட்ட பொம்மா’ பாடல் கவனத்தை பெற்று தந்தது.
2021-ல் பிரபாஸுடன் இணைந்து ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்தார்.
அடுத்து விஜய்யுடன் இணைந்து ‘பீஸ்ட்’ மூலம் மீண்டும் தமிழில் தலைகாட்டினார்.
தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’ படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் வலம் வருகிறார் பூஜா ஹெக்டே.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக ‘ரெட்ரோ’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ரோஷன் ஆண்ட்ரூ இயக்கத்தில் ஷாகித் கபூருடன் அவர் நடித்துள்ள ‘தேவா’ என்ற இந்திப் படம் வெளியாகியுள்ளது.
“என்னைப் பொறுத்தவரை நடிப்பு என்பது எப்போதும் மாறிக் கொண்டிருப்பது” என்கிறார்.
“நான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் எனக்கு நானே சவாலாக இருக்க விரும்புகிறேன்” என்கிறார் பூஜா ஹெக்டே.
“படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மட்டுமல்ல, ஒவ்வொரு ஃபிரேமிலும் கதாபாத்திரமாக வாழ வேண்டும் என நினைக்கிறேன்” என்பது அவர் ஸ்டேட்மென்ட்
“இன்னும் விதவிதமான பாத்திரங்களில் நடிக்க எனக்கு ஆசை இருக்கிறது. அதற்காகக் காத்திருக்கிறேன்” என்கிறார் பூஜா ஹெக்டே.