Published on : 28 Jan 2025 13:13 pm
‘லப்பர் பந்து’ பட நாயகி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
கடந்த 2022-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது ‘வதந்தி’ இணையத் தொடர்.
‘வதந்தி’ வெப் சீரிஸில் வெலோனி கதாபாத்திரத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.
‘வதந்தி’ தொடரில் கதையை நகர்த்தும் முக்கியக் கதாபாத்திரம் மூலம் வசீகரித்தார் சஞ்சனா.
இந்த இணையத் தொடரை தொடர்ந்து அவர் நடித்த படம்தான் ‘லப்பர் பந்து’.
ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘லப்பர் பந்து’ படத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சஞ்சனா.
மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்தில் உதவி இயக்குநராகவும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையாகவும் பணியாற்றியுள்ளார்.
‘லப்பர் பந்து’ படத்துக்குப் பிறகு இவரது இன்ஸ்டா பக்கத்தையும் ரசிகர்கள் மொய்க்கத் தொடங்கினர்.
திரைப்படங்களில் நடிப்பதுடன் ஒரு படத்தை இயக்கவும் சஞ்சனா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.