Published on : 28 Jan 2025 13:08 pm
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் இன்ஸ்டா பகிர்வுகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
ஷ்ரத்தா பகிர்ந்த சமீபத்திய புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
கடந்த 2015-ல் வெளியான ‘கோஹினூர்’மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஷ்ரத்தா.
‘யூ டர்ன்’ படத்தின் மூலம் கன்னட திரையுலகில் நுழைந்தார்.
‘காற்று வெளியிடை’ படத்தின் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.
2017-ல் கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான‘இவன் தந்திரன்’ திரைப்படம் தான் அவருக்கான தமிழ் சினிமா ஐடி கார்டு.
விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் பரவலான கவனத்தை ஈர்த்தது.
2019-ல் அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் அழுத்தமான நடிப்பை பதிவு செய்தார்.
மாதவன் உடன் நடித்த ‘மாரா’ படமும் ஷ்ரத்தாவை கவனிக்க வைத்தது.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான ‘இறுகப்பற்று’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் வெளியான பாலகிருஷ்ணாவின் ‘டாக்கு மகாராஜ்’ படத்தில் நடித்திருந்தார் ஷரத்தா.
தமிழில் தான் மிகவும் எதிர்பார்க்கும் ‘ஆர்யன்’ பட ரிலீஸுக்காக காத்திருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.