90-களில் தடம் பதித்து இப்போது இன்ஸ்டாவில் ஈர்க்கும் மாளவிகா!
Published on : 07 Dec 2024 18:21 pm
1 / 20
நடிகை மாளவிகா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
2 / 20
கடந்த 1999-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘உன்னைத் தேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் மாளவிகா.
3 / 20
அடுத்து ‘ஆனந்த பூங்காற்றே’ படத்தில் நடித்தார்.
4 / 20
‘ரோஜா வனம்’, ‘பூப்பறிக்க வருகிறோம்’ படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.
5 / 20
‘சோரா சித்த சோரா’ படத்தின் மூலம் கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானார்.
6 / 20
2000-ல் வெளியான ‘சாலா பாகுண்டி’ திரைப்படம் மூலம் தெலுங்கு திரை ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
7 / 20
மீண்டும் தமிழுக்கு திரும்பியவர் ‘வெற்றிக்கொட்டி கட்டு’ படத்தில் ‘கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு’ பாட்டின் மூலம் பட்டிதொட்டியெங்கும் கவனம் பெற்றார்.
8 / 20
அடுத்து ‘ஐயா’, ‘சந்திரமுகி’, ‘திருட்டுப் பயலே’ ஆகிய படங்களில் நடித்தார்.
9 / 20
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் ‘வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும்’ பாடலில் மஞ்சள் சேலையில் மனம் கவர்ந்தார்.
10 / 20
‘நான் அவன் இல்லை’ படத்துக்குப் பிறகு தொடர்ந்து சிறப்புத் தோற்றங்களில் நடித்தார்.
11 / 20
உதாரணமாக, ‘அற்புத தீவி’, ‘மச்சக்காரன்’ ‘குருவி’, ஆகிய படங்களில் நடித்தார்.
12 / 20
கடைசியாக 2008-ம் ஆண்டு சுந்தர்.சியின் நடிப்பில் வெளியான ‘ஆயுத எழுத்து’ படத்தில் நடித்திருந்தார் மாளவிகா.
13 / 20
அதன்பிறகு அவர் திரையுலகிலிருந்து விலகியே இருக்கிறார்.
14 / 20
இருப்பினும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.
15 / 20
16 / 20
17 / 20
18 / 20
19 / 20
20 / 20