மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு - புகைப்படத் தொகுப்பு
Published on : 18 Feb 2023 15:24 pm
1 / 10
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (சனிக்கிழமை) காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
2 / 10
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புதுடெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு இன்று (பிப்.18) காலை 11.40 மணிக்கு வந்தார்.
3 / 10
குடியரசுத் தலைவரை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர். தமிழக ஆளுநரின் துணைவியர் மலர் கொடுத்து குடியரசுத் தலைவரை வரவேற்றார்.
4 / 10
முற்பகல் 11.50-க்கு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு, பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், தெற்குவாசல், கீழவாசல் சந்திப்பு, விளக்குத் தூண், வெங்கலக்கடை தெரு வழியாக கிழக்கு சித்திரை வீதிக்கு மதியம் 12.15 மணிக்கு குடியரசுத் தலைவர் வந்தடைந்தார்.
5 / 10
நண்பகல் 12.15 மணிக்கு அம்மன் சன்னதி பகுதியில் குடியசுத் தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்பு மீனாட்சி அம்மனையும், சுந்தரேசுவரரையும் தரிசனம் செய்தார்.
6 / 10
கோயிலை சுற்றிப் பார்த்துவிட்டு பிற்பகல் 12.45 மணிக்கு மேல் காரில் புறப்பட்டு அழகர்கோவில் சாலையிலுள்ள அரசு சுற்றுலா மாளிகைக்குச் செல்கிறார் குடியரசுத் தலைவர்.
7 / 10
மதிய உணவுக்குப் பின்பு கோரிப்பாளையம், கீழவாசல் வழியாக விமான நிலையம் சென்றடைகிறார். பின்னர் 2.10 மணிக்கு தனி விமானம் மூலம் கோவைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
8 / 10
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மதுரையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
9 / 10
விமான நிலையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதி, குடியரசுத் தலைவர் காரில் செல்லும் வழித்தடப் பகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
10 / 10
கோயிலைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.