Published on : 04 Jun 2024 08:19 am

தமிழக ஸ்டார் தொகுதிகள் நிலவரம் @ தேர்தல் முடிவுகள் 2024

Published on : 04 Jun 2024 08:19 am

1 / 20
கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 5,68,200 வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் கட்சி கலாமணி 82,657 வாக்குகளை பெற்றுள்ளார்.
2 / 20
ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் நவாஸ் கனி 422156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 282965 வாக்குகளுடன் தோல்வியை தழுவினார். இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 92134 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
3 / 20
தருமபுரி மக்களவைத் தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே திமுக வேட்பாளர் மணி வெற்றி பெற்றுள்ளார். அவர் 437357 வாக்குகள் பெற்றுள்ளார். அதேநேரம் கடும் போட்டியை கொடுத்த பாமக வேட்பாளர் 410105 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவி இரண்டாமிடம் பிடித்தார். அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன் 297774 வாக்குகள் பெற்று மூன்றாமிடமும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா நான்காமிடமும் 65726 பெற்றனர்.
4 / 20
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி 503317 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணி 148380 வாக்குகளுடன் தோல்வியை தழுவினார். நாம் தமிழர் வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 116712 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். தமாக வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 115401 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
5 / 20
தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 459294 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் 228601 வாக்குகளுடன் தோல்வி. அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 127630 வாக்குகளுடன் மூன்றாம் இடம். நாம் தமிழர் வேட்பாளர் மதன் 61166 வாக்குகளுடன் நான்காம் இடம் பெற்றார்.
6 / 20
சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் 479112 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசன் 378607 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 157156 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் இரா.ஜான்சிராணி 62706 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
7 / 20
நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 536005 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் எல்.முருகன் 263410 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் 255938 வாக்குகளுடன் மூன்றாம் இடமும், உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் ஜெயக்குமார் 68461 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
8 / 20
தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 305908 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 187838 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 100901 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் தமிழ்ச்செல்வி 46326 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
9 / 20
விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 368063 பெற்று பெற்று பின்னடவை சந்தித்துள்ளார். முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 374473 வாக்குகளுடன் முதலிடத்திலும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 159744 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் 74106 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
10 / 20
மதுரை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றிபெற்றுள்ளார். அவர் 4,30,323 வாக்குகள் பெற்றார். 2.09 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி. பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் 2,20,914 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பெற்று தோல்வி. அதிமுக வேட்பாளர் சரவணன் 2,04,804 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார். நாம் தமிழர் வேட்பாளர் சத்யாதேவி 92,879 வாக்குகளுடன் நான்காம் இடம்.
11 / 20
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வெற்றிபெற்றுள்ளார். அவர் 668746 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 243360 வாக்குகளுடன் தோல்வியை தழுவினார். தமாகா வேட்பாளர் வேணுகோபால் 185183 வாக்குகளுடன் மூன்றாம் இடமும், நாம் தமிழர் வேட்பாளர் வெ.ரவிச்சந்திரன் 123906 வாக்குகளுடன் நான்காமிடமும் பிடித்தனர்.
12 / 20
மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 413848 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் 158948 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 67728 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகேயன் 43083 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
13 / 20
பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு 573604 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் என்.டி. சந்திரமோகன் 202162 வாக்குகளுடன் தோல்வியை தழுவினார். இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் 152663 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார்.
14 / 20
கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 527318 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்னண் 358958 வாக்குகளுடன் தோல்வியை தழுவினார். நாம் தமிழர் வேட்பாளர் மரியா ஜெனிபர் 51081 வாக்குகளுடன் மூன்றாம் இடமும் உள்ளனர். அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் 39782 வாக்குகளுடன் நான்காமிடம் பெற்றனர்.
15 / 20
வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 567710 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 351445 வாக்குகள் பெற்று தோல்வி. அதிமுக வேட்பாளர் பசுபதி 115970 வாக்குகளுடன் மூன்றாம் இடம். நாம் தமிழர் வேட்பாளர் மகேஷ் ஆனந்த் 49937 வாக்குகளுடன் நான்காம் இடம் பெற்றார்.
16 / 20
தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 400816 வாக்குகள் பெற்று வெற்றியை ருசித்துள்ளார். அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 215513 வாக்குகளுடன் தோல்வி அடைந்தார். பாஜக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன் 192876 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார்.
17 / 20
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 409510 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 212229 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். நாம் தமிழர் வேட்பாளர் எழிலரசி 187422 வாக்குகளுடன் மூன்றாமிடம் பிடித்தார். பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் 177280 வாக்குகளுடன் நான்காமிடம் பிடித்தார்.
18 / 20
திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ 542213 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 229119 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் ராஜேஷ் 107458 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 100747 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
19 / 20
திருப்பூர் தொகுதியில் சிபிஐ வேட்பாளர் சுப்புராயன் 409330 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் 303327 வாக்குகளுடன் தோல்வி. பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 155449 வாக்குகளுடன் மூன்றாம் இடம், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி 81838 வாக்குகளுடன் நான்காம் இடம் பிடித்தார்.
20 / 20
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 415447 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் 252631 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், பாஜக வேட்பாளர் நரசிம்மன் 178427 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் வித்யா ராணி 88621 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.

Recently Added

More From This Category

x