Published on : 20 May 2020 14:49 pm

பேசும் படங்கள்... (20.05.2020)

Published on : 20 May 2020 14:49 pm

1 / 39
காற்றில் பறக்கிறதா கட்டுப்பாடுகள்?: சேலத்தில் அரசு உத்தரவின்படி பல இடங்களில் அத்தியாவசியக் கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் , மளிகைக் கடைகள் போன்றவற்றில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் - சேலம் சூரமங்கலம் பகுதியில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் விற்பனையில் ஈடுபட்ட ஒரு காய்கறிகடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். படம்: எஸ்.குருபிரசாத்
2 / 39
முடி திருத்தக் கடைகளைத் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்... சேலம் மாநகரப் பகுதியில் பெரமனூர் 40 அடி சாலையில் தடையை மீறி திறக்கப்பட்ட ஒரு முடி திருத்தகக் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். படம்: எஸ்.குரு பிரசாத்.
3 / 39
தூய்மை பணியாளருக்கு பாதபூஜை: கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தூய்மைப் பணியாளர்களின் சேவை அளப்பரியது. அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக சேலம் கோரிமேடு பகுதியில் அப்பகுதி மக்கள் தூய்மை பணியாளர்களுக்கு இன்று காலையில் பாத பூஜை செய்து மரியாதை செலுத்தினர். படம்: எஸ்.குரு பிரசாத்.
4 / 39
5 / 39
சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்.. இன்று... பத்திரிகையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதற்றமின்றி பதிலுரைத்தார்.. பா.ஜ.க-வின் தமிழ் மாநிலத் தலைவர் முருகன். படம் :க.ஸ்ரீபரத்
6 / 39
கரோனா தொற்று காரணத்தால் தமிழகத்தில் 144 அமல் படுத்தப்பட்ட நிலையில்... எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெரு 55 நாட்களுக்கும் மேலாக வெறிச்சோடிக் காணப்பட்டது. தற்போது அரசு சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் சில வணிக நிறுவனங்களை நடத்த அனுமதித்து உள்ளதால்மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளது. படம்:க.ஸ்ரீபரத்
7 / 39
புயலும் அலைச் சீற்றமும்: உம்பன் புயல் அறிவிப்பு இரண்டு நாட்களாக கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உம்பன் புயல் இன்று காலையில் கரையைக் கடக்கும் நேரத்தில் சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகம் பகுதியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. படம்:க.ஸ்ரீபரத்
8 / 39
9 / 39
10 / 39
கரோனா தொற்றுப் பரவுவதை தடுக்க - மதுரை மாநகராட்சி ஊழியர் மற்றும் சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் இணைந்து... மதுரை கே.கே. நகர் பகுதியில் வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்தனர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 39
எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை தெற்குவாசல் நாடார் நடுநிலைப் பள்ளி அருகே மிக மிக ஆபத்தான சூழ்நிலையில் இருசக்கர வாகனங்களில் தகரங்களை எடுத்துச் செல்லும் நபர். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி
12 / 39
சிறப்பாக திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் மாதம்... வைகாசி மாதம். இந்த மாதத்தில் மதுரை பகுதியில் பறிக்கும் மல்லிகைப்பூக்கள் தமிழகம் முழுக்க விற்பனைக்குப் போகும். ஆனால் அமலில் இருக்கும் ஊரடங்கால் இந்த மல்லிகைப் பூவின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது மட்டுமல்லாது - தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு செல்வதும் தடைபட்டுக் கிடக்கிறது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
13 / 39
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்... வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர். பி .உதயகுமார் தலைமையில் கரோனா தொற்று விழிப்புணர்வு நடவடிக்கை சம்பந்தமான ஆலோசனை செய்யப்பட்டது.. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்ஆகியோர் கலந்து கொண்டனர். . படம் : எஸ் . கிருஷ்ணமூர்த்தி
14 / 39
ஆஸ்திரேலியாவில் இருந்து சுற்றுலாவுக்கும் பணி நிமித்தமாகவும் சென்னை வந்திருந்த பயணிகள் கரோனா தொற்று தடுப்புக்காக அமலில் இருந்த ஊரடங்கால் சென்னையிலேயே முடங்கியிருந்தனர். அவர்களில் 210 பேர் இன்று தூதரக உதவியுடன் அவர்கள் சொந்த தேசங்களுக்கு அனுப்பபட்டனர். படங்கள்:எம்.முத்துகணேஷ்
15 / 39
16 / 39
17 / 39
ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வந்து ஊரடங்கில் சிக்கிக் கொண்ட பயணிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று அவர்களின் சொந்த தேசத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். குழந்தைகளோடு வந்த பயணிகள் தாயகம் திரும்பும்போது அவர்களுடைய குழந்தைகளின் குதூகலம் பெரியவர்களை ரசிக்க வைத்தது. படங்கள்: எம்.முத்துகணேஷ்
18 / 39
19 / 39
திருச்சி ரயில்வே சந்திப்பில் இருந்து நேற்று சிறப்பு ரயில் மூலம் பிஹாருக்கு செல்ல வரிசையில் நிற்கும் வடமாநிலத் தொழிலாளர்கள். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
20 / 39
21 / 39
22 / 39
23 / 39
திருச்சி ரயில்வே நிலையத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள்... ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேருந்துகளிலேயே அமர வைக்கப்பட்டனர். இந்நிலையில் - பேருந்தின் மேற்கூரை வெப்பம் தாங்காமல் அவர்கள் அவதியுற்றனர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
24 / 39
முழு ஊரடங்கு சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்ட பிறகு... புதுச்சேரியில் பொது மக்கள் வசதிக்காக நகரப் பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. படம்: எம்.சாம்ராஜ்
25 / 39
முழு ஊரடங்கு சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்ட பிறகு... புதுச்சேரியில் பொது மக்கள் வசதிக்காக நகரப் பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட பேருந்து ஒன்றில் பயணிகள் யாருமே ஏறாததால்.... இன்று காலையில் ஓட்டுநர், நடத்துநர் மட்டுமே அமர்ந்து சென்றனர். படம்: எம்.சாம்ராஜ்
26 / 39
புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பதற்காக... புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உத்தரவுக்காக காத்திருக்கும் நிலையில்... மறுபுறம் மது பானக் கடைகள் முன்பாக மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியுடன் ஒருவர் பின் ஓருவராக செல்லும் வகையில் கம்புகள் கட்டும் பணி நடந்து வருகிறது. படம்: எம்.சாம்ராஜ்
27 / 39
இன்று முகூர்த்த நாள் என்பதாலும்.... 55 நாட்களாக அமலில் இருந்த ஊரடங்குக்கு பிறகு நகைக் கடைகள் திறக்கப்பட்டதாலும்... சென்னை - நங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு பிரபல நகைக் கடைக்கு உள்ளே... நிரம்பிய மக்கள் கூட்டத்தால்.... கடைக்கு வெளியில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் காத்திருந்தனர். ’’இவ்வளவு ரண களத்திலும் இவர்களுக்கு நகை மீதான ஆசை விடவில்லையே...’’ என அப்பகுதியைக் கடப்பவர்கள் முணுமுணுத்தபடியே சென்றதை காண முடிந்தது. படங்கள்: எம்.முத்துகணேஷ்
28 / 39
29 / 39
கோவை ரயில்நிலையத்தில் இருந்து உத்திரப்பிரதேசத்துக்கு சிறப்பு ரயில் மூலம் செல்ல... டோக்கன் வாங்க கோவை வடக்கு வட்டட்சியர் அலுவலகத்துக்கு வெளியே காத்திருக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் . படம் : ஜெ .மனோகரன்
30 / 39
31 / 39
கரோனா வைரஸ் தடுப்புக்காக அமலில் இருக்கும் ஊரடங்கால்... நாடக மற்றும் நடனக் கலைஞர்கள்... தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர். இந்நிலையில் - கலை நிகழ்ச்சிகளுக்கு ஆடை ஆபரணங்களை வாடகைக்கு விடும் கடைகளுக்கு 2 மாத வாடகைத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோவை ஆட்சியர் அலுவலக வளாக முன்பு... நடனமாடியபடியே அந்தக் கலைஞர்கள் தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர். படம் : ஜெ .மனோகரன்
32 / 39
கோவை குற்றாலத்தில் ஈரப்பதங்களைத் தேடிப் படையெடுக்கும் வண்ணத்துப்பூச்சிகள். படம் : ஜெ .மனோகரன்
33 / 39
34 / 39
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடியாக 55 நாட்களுக்கும் மேலாக அமலில் இருக்கும் ஊரடங்குக்குப் பிறகு....கோவை பேரூர் பகுதியில் நடமாடும் வண்டியில் திருஷ்டி பொம்மைகள் விற்க தொட்ங்கியிருக்கும் வியாபாரி . படம் : ஜெ .மனோகரன்
35 / 39
தமிழகத்தை நம்பி.... உழைக்க வந்த எண்ணற்ற வட மாநிலத் தொழிலாளர்கள்... தற்போது கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அமலில் இருக்கும் ஊரடங்கால்... வேலைவாய்ப்பு இன்றி... வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர், இந்நிலையில் - இந்தத் தொழிலாளர்கள் தமிழக அரசு சார்பில் சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து - சேலம் மாவட்டத்துக்கு உழைக்க வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் இன்று (20.5.2020) இரவு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ரயில் நிலையத்துக்குள் செல்வதற்காக சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள். படங்கள்: எஸ். குருபிரசாத்
36 / 39
37 / 39
38 / 39
39 / 39

Recently Added

More From This Category

x